"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


ஒளிந்து வாழும் NRI கணவன்கள்






இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு பிறகு மனைவியை வரதட்சணை கொடுமை செய்து இந்தியாவிற்கு விரட்டிவிட்டு பல வெளிநாடு வாழ் இந்தியக் கணவன்கள் வெளிநாடுகளில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்.

அவர்களைப் பிடித்துக்கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு இந்திய தேசிய மருமகள் நல வாரியமும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், சிபிஐ மற்றும் இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலிஸ் அமைப்பும் மருமகள்களுக்கு பல வழிகளில் நன்றாகவே உதவி செய்து வருகின்றன என்று பல மருமகள்களுக்கும் தெரிந்த விஷயம்.

இந்த விஷயம் பற்றி கேள்விப்படாத மருமகள்களுக்காகவே பின்வரும் செய்தி வந்திருக்கிறது. படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படி என்ற முந்தைய பதிவினையும் படித்துக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!

48 runaway NRI grooms lose passport in Punjab
July 7,2011 NDTV

Jalandhar:
NRI grooms who believe "holiday marriages" are an easy way to make some money can think again. In just two months, the regional passport office (RPO) here has confiscated the passports of 48 men who married, allegedly got dowry, dumped their wives and attempted to flee the country.

In Punjab's Doaba area, an NRI groom is a prize catch. But many women have had a bitter experience. There have been numerous instances of men settled abroad coming back to marry and abandoning their wives after taking away their money and valuables.

To stem this exploitation, the RPO, which functions under the Ministry of External Affairs, initiated a women's grievance cell in February.

"We have established a 'women's grievance cell' to hear complaints from women who have been duped by their NRI husbands. So far, we have confiscated 48 passports of errant husbands by invoking a legal provision of the Passport Act, 1967," Parneet Singh, the passport officer of the Jalandhar RPO, told IANS.

The complainant has to submit the marriage certificate, copy of the First Information Report (FIR) filed with the police and documents detailing husband's name, date of birth and address.

"Over 100 complaints are still under our scrutiny and we would soon take appropriate action," the official said.

Once the complaint is received, he said, a show cause notice is issued. If there is no response to the notice, the passport is confiscated when the NRI shows it at the airport.

"Then he cannot leave the country until the matter is resolved, either legally or through mutual consent," he added.

"However, if he manages to flee, then we inform the Indian embassy in that country and he would be immediately deported to India, depending on the merits of the case," Parneet Singh said.

According to the passport office officials, Section 10 (3) of the Passport Act says the issuing authority can impound the passport in the public interest after giving a show cause notice.

The Jalandhar RPO caters to Jalandhar, Hoshiarpur, Nawanshahr and Kapurthala districts.

According to an RPO official, around 15,000 girls from Doaba region, consisting of Jalandhar, Hoshiarpur and Kapurthala districts, were duped by their NRI husbands during the last few years.

Jalandhar has the maximum number of such cases.

The officials have also directed district marriage officers to provide details about marriages involving NRI grooms so that their wives' names can be added to the passports.

The initiative has encouraged women to come out and voice their grievances.

"Manjit Singh had married me in October 2009 and left for Italy after two months. He had promised to call me to Italy in another three months. But since then he has snapped all relations with us and does not answer our calls," a 28-year-old from Jalandhar told IANS.

"My parents had given expensive gifts and huge dowry to him. I have filed a complaint against him at the RPO office. I hope that my husband will be deported to India and strict punishment will be given to him," said the woman, who did not want her name to be made public.

Other women have also been encouraged to come forward.

Kirpal Kaur, another victim from Jalandhar, told IANS: "A Canada-based man deceived me last year. He married me and took me to various places in India and disappeared with my cash and jewellery. Now I am also planning to approach the RPO against him."

Read more at: http://www.ndtv.com/article/india/48-runaway-nri-grooms-lose-passport-in-punjab-117366?cp&cp




பெங்களூரில் நடந்த அட்டூழியம்

மருமகள்களே,

சமீப காலமாக இந்திய மருமகள்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு பாதுகாப்பு தரும் சாதகமான சட்டங்களுக்கு எதிராகவும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக இந்திய அரசாங்கம் இதுவரை இந்திய மருமகளின் ஆபத்துக்கால அன்புத் தோழியாக இருந்துவந்த IPC498a என்ற வரதட்சணை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முயற்சி செய்துவருகிறது. இது இந்திய மருமகள்களுக்கு மிகவும் ஒரு ஆபத்தான சூழ்நிலையாகும்.

இதுபோன்ற தருணத்தில் பெங்களூரில் வாழும் மாமியார்கள் மற்றும் கணவர்கள் சாலையில் ஊர்வலமாகச் சென்று மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு அட்டூழியங்கள் செய்திருக்கிறார்கள். அந்த வீடியோவை உங்களுக்காத் தந்திருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கவனமாகப் பாருங்கள்.

வீடியோ - 1



வீடியோ - 2



வீடியோ - 3



இந்த சாதகமற்ற சூழ்நிலையைக் கண்டு மருமகள்கள் கொஞ்சமும் கலங்கவேண்டாம். கணவன்களும், மாமியார்களும் போடும் கூப்பாடுகளைக் கண்ட இந்திய அரசாங்கம் அவர்களைத் திருப்திபடுத்துவதற்காக IPC498a சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதாக அறிவித்திருந்தாலும் அது என்றுமே மருமகள்களின் நட்பினை இழக்கத் தயாராக இல்லை.

அதனால் IPC498a சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதாக அறிவித்த அதே நேரத்தில் குடும்ப வன்முறை சட்டத்தை (Domestic Violence Act) நன்றாக முடுக்கிவிட ஆரம்பித்திருக்கிறது. இது IPC498A சட்டத்தைவிட மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகும். அதனால் மருமகள்கள் இதுபோன்ற சூழ்நிலையைக் கண்டு கலங்கிவிடாமல் தயங்காமல் குடும்ப வன்முறை சட்டத்தை பயன்படுத்த ஆரம்பித்து விடலாம். இந்த சட்டத்தில் உள்ள நுணுக்கங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

இந்த சட்டத்தை பயன்படுத்துவதில் ஏதாவது தயக்கம் இருந்தால் வரதட்சணை சட்டங்கள் மூலம் மனைவி கணவனை மிரட்டினால் தவறில்லை என்ற பதிவினைப் படியுங்கள். மனதில் தெளிவு பிறக்கும்.

வாழ்த்துக்கள்!


விவாகரத்து கேட்கும் கணவனுக்கு நெத்தியடி கொடுப்பது எப்படி?

இந்தியாவில் மருமகள்கள் பலவித வண்ணக் கனவுகளோடு திருமண வாழ்வில் அடி எடுத்து வைத்து மாமியார் வீட்டிற்குச் செல்கிறார்கள். ஆனால் அங்கே சென்று சிலநாள் வாழ்ந்த பிறகுதான் திருமணம் என்ற பெயரில் கணவனும் அவனது குடும்பத்தாரும் செய்யும் கொடுமைகள் ஒவ்வொன்றாக தெரிய வருகிறது.

இந்தக் கொடுமைகளில் முக்கியாமனது கூட்டுக் குடும்பம் என்ற பெயரில் நாத்தனார்கள் அடிக்கும் கூத்து. வயதாகிவிட்டது என்று காரணம் காட்டி மாமனாரும் மாமியாரும் மருமகளிடம் பணிவிடை என்ற பெயரில் எதிர்பார்க்கும் இலவச கொத்தடிமைத்தனம். இதுபோன்ற பிரச்சனைகளை யாரிடம் சொல்லி அழுவது என்று பல மருமகள்கள் மனதுக்குள்ளேயே அழுது கொண்டிருக்கிறார்கள்.

இந்தியக் கணவன் மற்றும் அவனது குடும்பத்தினர் அனைவருக்கும் மருமகள் என்றால் ஏதோ இலவசமாகக் கிடைத்த தொலைக்காட்சிப் பெட்டி என்ற நினைப்பு. ஒவ்வொருவரும் ஒரு “சானலைப்” (Channel) பார்க்க விரும்புவதுபோல கணவன் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மருமகளை கொடுமை செய்து இன்பம் காணுகிறார்கள். என்ன ஒரு கொடுமை!

இந்தக் கொடுமை தாங்காமல் தனியாக வீடு பார்த்து குடும்பம் நடத்தலாம் என்றால் கணவன் ஒத்துழைப்பதில்லை. மருமகள் சற்றுக் குரலை உயர்த்தினால் உடனே விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டுவார்கள் இந்த மடையர்கள்.

இதுபோன்ற சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பல மருமகள்கள் இந்தப் பிரச்சனையை எப்படி பக்குவமாகக் கையாண்டு விவாகரத்து கோரும் கணவனுக்கு நெத்தியடி கொடுப்பது என்று இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இந்து திருமணச் சட்டப்படி விவாகரத்து கோருவதற்கு சில அடிப்படைக் காரணங்கள் தேவைப்படும். உதாரணத்திற்கு கணவனோ அல்லது மனைவியோ கொடுமை செய்தால் அதன் அடிப்படையில் விவாகரத்து கோரலாம்.

இந்திய மனைவி ஒருபோதும் தனது கணவனுக்குக் கொடுமை இழைப்பதில்லை என்று உலகத்திற்கே தெரியும். அதனால் கணவன் இந்த அடிப்படையில் விவாகரத்து கோரினால் விவாகரத்து கிடைக்கவே கிடைக்காது!

ஆனால் மனைவியின் சம்மதத்துடன் விவாகரத்திற்கு விண்ணப்பித்தால் கணவனுக்கு விவாகரத்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த சட்டப் பிரிவிற்கு இந்து திருமணச் சட்டம் பிரிவு 13 (B) [Hindu Marriage Act, 1955 Section 13B] என்று பெயர்.

மருமகள்கள் இந்த சட்டப் பிரிவைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு இதனையே தூண்டிலாகப் பயன்படுத்தி விவாகரத்து கோரும் கணவனுக்குப் பாடம் கற்பிக்கலாம்.

முதலில் கணவனின் விவாகரத்திற்குச் சம்மதம் (Mutual Consent) தெரிவித்து கணவனை நீதிமன்றத்தில் விவாகரத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கச் செய்யவேண்டும். நீதிமன்றம் தனது இறுதி முடிவினைத் தெரிவிக்க 6 மாதங்கள் வரை காலக் கெடு கொடுக்கும்.

இந்த நேரத்தில் கணவன், ஆகா மனைவி விவாகரத்திற்குச் சம்மதித்துவிட்டாள்! தனக்கு விரைவாக விவாகரத்து கிடைத்துவிடும் என்று “பலவித கனவுகளோடு” காத்துக்கொண்டிருப்பான். ஆனால் இந்த 6 மாத காலம் முடிவதற்குள் (கடைசி நாளன்று) திடீரென்று தனக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லை என்று கூறி மருமகள் நீதிமன்றத்தில் மற்றொரு விண்ணப்பத்தைக் கொடுத்தால் போதும் அத்தோடு கணவனின் விவாகரத்து என்ற கற்பனைக் கோட்டை சுக்கு நூறு அல்ல ஆயிரமாக தகர்ந்துவிடும்!

பிறகு கணவன் இந்த விவாகரத்து விண்ணப்பத்தின் மீது மேல்முறையீடு செய்து மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று பல ஆண்டுகளை வீணடித்துப் போராடுவான்.

ஆனால் மருமகள் பிடிவாதத்துடன் இருந்து குழந்தையின் நலனுக்காக நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று ஒரே போடாக போட்டு விட்டால் போதும். அவ்வளவுதான் உச்ச நீதிமன்றமே அசந்துபோய்விடும். பிறகென்ன கணவனுக்கு விவாகரத்து இந்த ஜென்மத்தில் கிடைக்காது. கணவன் தனது விவாகரத்து வழக்கை ஆரம்பித்து பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மருமகளிடம் நெத்தியடி வாங்கிக்கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று மூக்கு உடைபட்டு திரும்பி வரவேண்டியதுதான்.

இதுதான் விவாகரத்து என்ற வலையை விரிக்கும் முட்டாள் கணவனுக்கு சம்மதம் (Mutual Consent) என்ற தூண்டிலைப்போட்டு மருமகள் கொடுக்கும் நெத்தியடி ரகசியம்!

இதுபோன்ற ஒரு தொழில்நுட்பத்தை ஒரு மருமகள் வெற்றிகரமாக செயல்படுத்தி 11 ஆண்டுகளாகப் போராடி உச்ச நீதிமன்றம் வரை சென்ற கணவனுக்கு நெத்தியடி கொடுத்திருக்கிறார். அதுதொடர்பான செய்தியையும் இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவின் ஒரு பகுதியையும் கீழே தந்திருக்கிறேன். படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.



புதுடில்லி:குழந்தையின் எதிர்காலத்தை முன்னிட்டு, விவாகரத்து மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது.

டில்லியை சேர்ந்த ஹித்தேஷ்வருக்கும், தீபாவுக்கும் கடந்த 94ம் ஆண்டு திருமணம் நடந்தது. 95ல் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதியினர் 2000ம் ஆண்டிலிருந்து பிரிந்து வாழ்கின்றனர். 2001ல் விவாகரத்து கேட்டு இவர்கள் விண்ணப்பித்தனர். "இந்த தம்பதியர் பிரிந்து வாழலாம்' என, கோர்ட் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், விவாகரத்தை அங்கீகரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஹித்தேஷ்வர் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் டி.கே.ஜெயின் மற்றும் எச்.எல்.தத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. தீபாவிடம் நீதிபதிகள் விசாரித்ததில், கணவனுடனான கசப்புணர்வு நீடித்தாலும் குழந்தைக்காக சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தார்.இதை கருத்தில் கொண்டு, மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பளிப்பதாக கூறி ஹித்தேஷ்வரின் மனுவை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.­


======

IN THE SUPREME COURT OF INDIA
CIVIL APPEALATE JURISDICTION
CIVIL APPEAL NO. 6288 OF 2008

Hitesh Bhatnagar ………….. Appellant
versus
Deepa Bhatnagar …………..Respondent

2) The appellant-husband and the respondent-wife got married according to the Hindu Marriage Act, 1955 [hereinafter referred to as ‘the Act’] in 1994, and are blessed with a daughter a year thereafter. Some time in the year 2000, due to differences in their temperaments, they beganto live separately from each other and have been living thus ever since. Subsequently, in 2001, the parties filed a petition under Section 13B of the Act before the District Court, Gurgaon, for dissolution of the marriage by grant of a decree of divorce by mutual consent. However, before the stage of second motion and passing of the decree of divorce, the respondent withdrew her consent, and in view of this, the petition came to be dismissed by the Ld. Addl. District Judge, Gurgaon, though the appellant insisted for passing of the decree. The appellant, being aggrieved, has filed appeal No. F.A.O. No. 193 of 2003, before the High Court of Punjab and Haryana. The Learned Judge, by his well considered order, dismissed the appeal vide order dt. 08.11.2006. Being aggrieved by the same, the appellant is before us in this appeal.


26) In the present case, time and again, the respondent has stated that she wants this marriage to continue, especially in order to secure the future of their minor daughter, though her husband wants it to end. She has stated that from the beginning, she never wanted the marriage to be dissolved. Even now, she states that she is willing to live with her husband putting away all the bitterness that has existed between the parties. In light of these facts and circumstances, it would be travesty of justice to dissolve this marriage as having broken down. Though there is bitterness amongst the parties and they have not even lived as husband and wife for the past about 11 years, we hope that they will give this union another chance, if not for themselves, for the future of their daughter.

We conclude by quoting the great poet George Eliot "What greater thing is there for two human souls than to feel that they are joined for life - to strengthen each other in all labour, to rest on each other in all sorrow, to minister to each other in all pain, to be one with each other in silent, unspeakable memories at the moment of the last parting."

27) Before parting with the case, we place on record our appreciation for the efforts made by Shri. Harshvir Pratap Sharma, learned counsel, to bring about an amicable settlement between the parties.

28) In the result, the appeal fails. Accordingly, it is dismissed. No order as to costs.

……………………………J.
[ D. K. JAIN]
……………………………J.
[ H. L. DATTU]
New Delhi,
April 18, 2011.

பின்குறிப்பு: மேலுள்ள விவாகரத்து வழக்கில் கணவன் விவாகரத்துக் கேட்டாலும்
மனைவி தன் குழந்தையின் நலனுக்காக அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக பிடிவாதம் பிடித்திருக்கிறார். அந்தக் குழந்தை 1995ல் பிறந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது அதற்கு வயது 16. இப்போது அது குழந்தை கிடையாது சுயமாக சிந்திக்கத் தெரிந்த இளம் பெண். ஆனால் மேலுள்ள வழக்கில் கணவன் தனது திருமண வாழ்வில் 11 ஆண்டுகளை இழந்துள்ளார். ஆனாலும், உச்ச நீதிமன்றம் மருமகளின் குரலுக்கு மட்டும்தான் செவி சாய்த்திருக்கிறது! இதனை இந்திய மருமகள்கள் நன்றாக கவனித்து குறிப்பெடுத்துக் கொள்ளவும்.

இந்த பதிவில் விவாகரத்து வழக்குத் தொடரும் கணவனுக்கு எப்படி நெத்தியடி கொடுப்பது என்று தெரிந்துகொண்டீர்கள். அடுத்த பதிவில் மருமகள் விரும்பும் விவாகரத்தைக் கொடுக்காத கணவனுக்கு எப்படி சட்டத்தின் துணையோடு நெத்தியடி கொடுத்து வழிக்குக் கொண்டுவந்து விவாகரத்துப் பெறுவது என்று தெளிவாக எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள்!


கணவனுக்கெதிராக செல்போனில் ஆதாரம் திரட்டுவது எப்படி?

மருமகள்களே,

உங்களுக்கு உபயோகமான ஒரு செய்தி. கணனுக்கு எதிராக வரதட்சணைப் புகார் கொடுக்கும்போது புகாருடன் நீங்கள் இணைக்கும் ஆதாரங்களுடன் (வரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்) கணவன் மற்றும் அவனது குடும்பத்தார் தொலைபேசியில் பேசிய பேச்சுக்களை பதிவு செய்து அதையும் உங்களது புகாருடன் இணைத்துவிடுங்கள். உங்களின் புகாரும் வழக்கும் மிகவும் உறுதியானதாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பின்வரும் செய்தியைப் படித்தால் உங்களுக்குப்புரியும்.

இதுபற்றிய தொழில் நுட்பத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள்!


சாட்டிங் மூலம் பல பெண்களை ஏமாற்றி கணவன் காதல் லீலை
தினகரன் 6/5/2011

சென்னை : சாட்டிங் மூலம் பல பெண்களை ஏமாற்றிவரும் தனது கணவரை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்வடிவு (27). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார்.

பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சொந்த ஊர் கோவை மாவட்டம். பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். என்னுடன் வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் பி.காம் படித்துள்ளார். இருவரும் காதலித்து 2009 பிப்ரவரி 1ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகுதான் கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் நான் கருவுற்றேன். கணவர் சாட்டிங் மூலம் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடன் சுற்றி திரிய ஆரம்பித்தார். அந்த பெண்களிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய்களை அவிழ்த்து விட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றார். இதை அறிந்த அந்த பெண் தொடர்பை துண்டித்து விட்டார்.

இந்நிலையில், மற்றொரு பெண்ணுடனும் தொடர்பு ஏற்படுத்தி, திருமணம் செய்வதற்காக, எனது பிரசவ செலவிற்காக வைத்திருந்த 1 லட்சம் மற்றும் 15 சவரன் நகைகளை செலவு செய்தார். அதன்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. போலீசில் புகார் அளித்தோம். சந்தோஷ்குமாரை கண்டுபிடித்து கொடுத்தனர்.

என்னுடன் சேர்ந்து வாழ்வதாக உறுதி அளித்தார். ஆனால், பெற்றோர் வீட்டிற்கு என்னை விரட்டினார். இதற்கு அவரது பெற்றோர் உடந்தையாக இருக்கின்றனர். தொடர்ந்து சாட்டிங் மூலம் எனது கணவர் பல பெண்களை ஏமாற்றி வருகிறார். அவரையும், அவரது பெற்றோரையும் கைது செய்து எனது பணம், நகையை மீட்டுத்தர வேண்டும். எனது, உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன் என்றார்.

முதல் இரவில் கதறிய பெண்

செந்தில்வடிவு & சந்தோஷ்குமார் தம்பதிகள் பதிவு திருமணம் செய்து கொண்ட அன்று இரவு ஒரு இளம்பெண் தன்னை ஏமாற்றி விட்டாயே என்று கூறி சந்தோஷ்குமாரிடம் போனில் கதறியதாக செந்தில்வடிவு தெரிவித்தார்.

செல்போனில் ஆதாரம்

தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ரோஷன் என்ற மகன் உள்ளான். சந்தோஷ்குமார் அடிக்கடி செல்போனில் பேசியது செந்தில்வடிவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, யாருடன் பேசுகிறார் என்பதை அறிந்து அந்த எண் மூலம் எதிர்முனையில் பேசிய பெண்ணிடம் நிலைமையை சொன்னார். அவர் சந்தோஷ்குமாரின் உண்மை குணத்தை அறிந்து செல்போன் பேச்சு முழுவதையும் பதிவு செய்து செந்தில்வடிவிடம் கொடுத்தார். தற்போது செந்தில் வடிவு இதை ஆதாரமாக கமிஷனரிடம் கொடுத்துள்ளார்.


வெளிநாட்டில் இருக்கும் கணவனை விரட்டிப் பிடிக்க எளிய தொழில்நுட்பம்

பல மருமகள்கள் தங்களது கணவனை நல்வழிப்படுத்துவதற்காக கொஞ்சம் மன தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வரதட்சணை வழக்குகளை பதிவு செய்கிறார்கள்.

ஆனாலும் சில வழக்குகளில் கணவன் வெளிநாட்டில் பதுங்கிவிடுவதால் வழக்கு அவ்வளவு சுறுசுறுப்பாக நடப்பதில்லை. இந்த நடைமுறை சிக்கல்பற்றி பல மருமகள்களுக்கும் நன்கு தெரிந்திருக்கும். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுவாழ் மருமகள்கள் உருவாக்கும் வரதட்சணை வழக்குகளில் இதுபோன்ற தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இந்த தொழில்நுட்ப சிக்கல்களை தீர்ப்பதற்காக பொதுவாக வழக்கறிஞர்கள் ஒரு அருமையான யோசனையை மருமகள்களுக்கு பல காலமாக கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதை பல மருமகள்களும் பின்பற்றி வெற்றி கண்டிருக்கிறார்கள்.

வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் கணவனை தங்களின் வழிக்குக் கொண்டுவருவதற்காக இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் வரதட்சணை வழக்கில் சேர்த்துவிட்டால் அவர்கள் கைது, சிறை, நீதிமன்றம் என்று அலையும்போது அந்தக் காட்சியைக் கண்டு வெளிநாட்டில் இருக்கும் கணவன் இந்தியாவிற்கு ஓடிவந்து எலி பொறியில் சிக்குவதுபோல தானாக மாட்டிக்கொண்டு பிறகு மருமகளின் வழிக்கு வந்துவிடுவான். இதுதான் பல ஆண்டுகளாக வெளிநாட்டு வாழ் கணவன்களை நல்வழிப்படுத்த வரதட்சணை வழக்குகளில் வழக்கறிஞர்களின் உதவியோடு மருமகள்கள் கையாண்டுவரும் தொழில்நுட்பம்.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. சில கணவன்கள் இந்த “எலிப்பொறி” நுணுக்கத்திலும் சிக்காமல் வெளிநாடுகளில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி வழிக்குக்கொண்டுவருவது என்று சமீப காலமாக பல மருமகள்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குழப்பத்தை போக்கும்விதமாக சமீபத்தில் ஒரு மருமகள் சென்னை உயர்நீதிமன்ற உதவியுடன் வரதட்சணை வழக்கில் ஒரு புதுமை படைத்திருக்கிறார். அந்த செய்தியை கீழே கொடுத்திருக்கிறேன். அந்த செய்தியைப் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.


சென்னை : வரதட்சணைக் கொடுமை புகார் தொடர்பான வழக்கு விசாரணையில், தமிழகத்தில் முதன்முறையாக, சென்னையிலுள்ள கோர்ட்டில் வெளிநாட்டில் இருக்கும் சாட்சியை, வெப் - கேமரா மூலம் இன்டர்நெட்டில் ஆஜர்படுத்தி, விசாரணை நடத்தினர்.

சென்னை, அண்ணாநகரை சேர்ந்த ஜெனிதா என்பவர், தன் கணவர் சாம்சுதீஷ் மற்றும் குடும்பத்தார் மீது, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசாரிடம் 2008ம் ஆண்டில், வரதட்சணை புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு, சென்னை எழும்பூர் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. வழக்கை, வரும் ஜூன் 4ம் தேதிக்குள் நடத்தி முடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தலைமை மாஜிஸ்திரேட் கிள்ளிவளவன் வழக்கை விரைந்து விசாரிக்கிறார். நேற்று, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரிடம் சாட்சி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அரசு வக்கீல் கந்தசாமி ஆஜரானார். புகார்தாரர் ஜெனிதா, அவரது தாயார் ஹெலன் நட்டர்ஜி, ஜெனிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ராஜசேகர் மற்றும் தனசேகரன் ஆகியோரிடம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. ஜெனிதாவின் தங்கை விவேதா ஆஜராகவில்லை. அவர் ஸ்வீடனில் இருப்பதாலும், தற்போது முக்கிய தேர்வு நடப்பதாலும் வரமுடியாத சூழல் உள்ளதாக புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கும் பொருட்டு, ஸ்வீடனில் இருக்கும் சாட்சியிடம், வெப் - கேமரா மூலம் விசாரணை நடத்த தலைமை மாஜிஸ்திரேட் கிள்ளிவளவன் உத்தரவிட்டார். கோர்ட் அறையில் இன்டர்நெட் இணைப்புடன் கூடிய கம்ப்யூட்டர் வைக்கப்பட்டு, ஸ்வீடனில் இருக்கும் விவேதா கம்ப்யூட்டரில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம், காலையில் 12.15 முதல் மதியம் 1.40 மணி வரையிலும், பிற்பகலில் ஒரு மணி நேரமும் சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அவரது வாக்குமூலம் ஆடியோவிலும், கோர்ட் டைப்பிஸ்ட் மூலமும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை மே 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை, சிறையில் இருக்கும் குற்றவாளிகளிடம் தான் வீடியோ கான்பரன்சில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்று தான், முதன் முதலாக வெப் - கேமரா மூலம் வெளிநாட்டில் இருக்கும் சாட்சியிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

எனவே, இனி வெளிநாட்டில் சாட்சி இருக்கிறார், புகார்தாரர் இருக்கிறார் அல்லது குற்றஞ்சாட்டப்படுபவர் இருக்கிறார் என காரணங்களை சொல்லி, வழக்கை இழுத்தடிக்கும் முயற்சிகளுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உங்களது வரதட்சணை வழக்கிலும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் கணவனை விரைவாக நல்வழிப்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.

வாழ்த்துக்கள்!


இந்திய மருமகளை ஏமாற்ற முயற்சி செய்யாதீர்கள்!

இந்திய மருமகள்களுக்காக பெண்கள் அமைப்புகளும், தலைவிகளும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குச் சமமாகப் போராடி அரசாங்கத்திடமிருந்து IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்ற பல அரிய சட்டங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் பல மருமகள்களுக்கு இவற்றை எப்படி பக்குவமாகப் பயன்படுத்த வேண்டும் என்றுகூட தெரியவில்லை. இதுபோன்ற ஒரு பரிதாபமான சூழ்நிலையில் தட்டுத்தடுமாறி சில மருமகள்கள் இந்த சட்டங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தால் அந்த மருமகள்களை மிரட்டி ஏமாற்றும் அநியாயங்கள் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கொடுமைகளைப் பற்றி முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன் - மருமகளை ஏமாற்றும் "மாமக்கள்" .

ஆனால் இந்தக் கொடுமை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பின்வரும் சமீபத்திய செய்தியைப் பாருங்கள்.



ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கணவர் மனைவியிடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளபோது, கணவரை விட்டு கொடுக்க மனைவியிடம் மகளிர் தினத்தன்று, போலீசார் பேரம் பேசிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் தெற்கு முனியசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாரதி(36). இவர் 18 ஆண்டுகளுக்கு முன் வழுதூரை சேர்ந்த மத்திய போலீஸ் செல்வத்தை திருமணம் செய்தார். இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில், கருத்துவேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். ராமநாதபுரம் சி.ஜே.எம். கோர்ட்டில் விவகாரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறி, மதுரையை சேர்ந்த முருகன் மகள் உஷாராணியை திருமணம் செய்தார் செல்வம். "இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் கிரியிடம் மனு கொடுத்தார் ஜெயபாரதி.

இதை விசாரிக்க ராமநாதபுரம் பஜார் ஸ்டேஷனுக்கு எஸ்.பி., உத்தரவிட்டார். "இனி உன்னால் சேர்ந்து வாழ முடியாது. உனது கணவர் கொடுப்பதை வாங்கி கொண்டு செல்,'' என, ஜெயபாரதியிடம் பேரம் பேசியுள்ளனர் போலீசார் . இச்சம்பவம் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயபாரதி கூறியதாவது: வருமானம் இன்றி எனது தாலியை விற்று மகனை படிக்க வைத்து வருகிறேன். கோர்ட்டில் வழக்கு இருக்கும் போது மறுதிருமணம் செய்த எனது கணவர் மீது நடவடிக்கை எடுங்கள் என போலீசில் கூறினால், "கொடுக்கும் பணத்தை வாங்கி செல். இல்லையேல் உனது மகன் வாழ்க்கை சீரழிந்துவிடும்,'' என மிரட்டுகின்றனர் என்றார்.

பஜார் இன்ஸ்பெக்டர் குணசுந்தரத்திடம் கேட்டபோது, "இரண்டாவது திருமணம் செய்ததற்கு உரிய ஆதாரங்களை கொண்டுவந்தால், நடவடிக்கை எடுக்கிறோம் என்று தான் கூறினோம். கோர்ட்டில் வழக்கு உள்ளபோது குடும்ப பிரச்னையில் தலையிட மாட்டோம். அதுவும் இந்த வழக்கை கூடுதல் எஸ்.பி., விசாரித்து வரும்போது நான் எப்படி பேசுவேன்,''என்றார்.


இப்படி ஏமாற்றப்படும் இந்திய மருமகள்களுக்கு தீர்வே கிடையாதா? என்று ஏக்கத்தோடு தவிக்கும் மருமகள்களுகு வழிகாட்டுவதற்காக ஒரு செய்தி வந்திருக்கிறது.

பின்வரும் செய்தியில் பாருங்கள் மேலுள்ள செய்தியில் இருப்பது போலவே ஒரு மருமகள் கணவனுக்கெதிராக காவல்நியைத்தில் புகார் கொடுத்ததை கவனிக்காமல் ஒதுக்கியிருக்கிறார்கள். புத்திசாலியான மருமகள் தேசிய பெண்கள் வாரியத் தலைவியை நேரடியாக சந்தித்துப் புகார் கொடுத்தவுடன் இப்போது “வேலை” நடக்க ஆரம்பித்திருக்கிறது.

மருமகள்களே,

அடங்காத கணவனையும் அவனது குடும்பத்தையும் அடக்குவதற்காக இந்திய சட்டங்கள் உங்களுக்கு இலவசமாக வேலை செய்யக் காத்துக்கொண்டிருக்கின்றன. அதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் போகும்போதுதான் நீங்கள் மேலுள்ள செய்தியில் இருப்பதுபோன்ற தடைகளை சந்திக்க நேரிடுகிறது.

உங்களைப் போன்ற மருமகள்களுக்கு உதவுவதற்காகவே அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்து தனியாக ஒரு அமைச்சரகத்தையும், வாரியத்தையும் அமைத்திருக்கிறது. அவற்றை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அந்த வாரியம் எங்கு இருக்கிறது, எப்படிப் போகவேண்டும் என்றுகூட நீங்கள் தவிக்கக்கூடாது என்பதற்காகத்தான் நீங்கள் உங்கள் வீட்டு நாற்காலியில் அமர்ந்தபடியே “ஆன் லைனில்” புகார் கொடுக்கும் வசதியை உங்களுக்காகவே தந்திருக்கிறார்கள். இதுபோன்ற வசதிகள் இருக்கும்போது அவற்றைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் அறியாமையில் சிக்கி கணவனிடமும் அவனது குடும்பத்திடமும் துன்பப்படலாமா?

உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் கணவனை சிறையில் அடைக்க மருமகள்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தேசிய மருமகள் வாரியத்தில் புகார் கொடுக்கலாம்!!!
 Online Complaint Registration for NRI's

இந்த வசதியை ஒவ்வொரு இந்திய மருமகளும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது தோழிகளுக்கும் இதுபற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள்.



GURGAON: The wife of a reputed Gurgaon-based industrialist has lodged a police complaint against her husband, accusing him of domestic violence. She has alleged that the accused had been harassing her for the past 23 years.

Geeta Sachdeva, wife of industrialist and owner of Su-Kam Power Systems, Kunwer Sachdeva, has also filed a written complaint with the National Commission for Women (NCW) accusing him of physical and mental torture. According to Geeta, she probably would have still endured it, but for the brutal way in which he allegedly beat her up a few weeks ago at Ramgarh, which compelled her to approach authorities.

Geeta lodged an FIR at Ramgarh police station on March 12. The investigating officer in Ramgarh, Ram Bhardwaj said, "We have filed an FIR under sections 107 and 116 of CrPC and the investigations are on."

On returning to Gurgaon from Ramgarh, in the face of police reluctance to register a complaint, she approached the women's cell, which summoned Sachdeva, but he did not turn up.

Gurgaon police commissioner S S Deswal said, "It is a social problem and not a criminal act. They have been married for 25 years. If they are unable to adjust, a counselor should be able to help them. We will try to counsel them and resolve the matter. If that does not help, we will register a case of domestic violence."

Geeta later met Girija Vyas, chairperson of National Commission for Women (NCW) and lodged a complaint.

In his defence, the accused denied having beaten his wife. "I don't know what you are talking about. I was not in Ramgarh that day."

Sachdeva also added that they have already filed for mutual divorce and that his legal team has lodged a complaint with the police.

வாழ்த்துக்கள்!


மருமகள்னா இப்படித்தான் தைரியமாக இருக்கவேண்டும்

கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுக்க அஞ்சி நடுங்கும் மருமகள்கள் இந்த செய்தியைப் படித்தபிறகாவது கொஞ்சம் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கணவன் மீது புகார் கொடுப்பது மட்டும் பெருமைக்குரிய விஷயமல்ல. வழக்கின் கடைசியில் கணவனின் குடும்பத்தில் எத்தனை பேர் சிறைக்குச் செல்கிறார்கள் என்பதில்தான் மருமகளின் ஒட்டுமொத்த வெற்றியே அடங்கியிருக்கிறது.


சாத்தான்குளம் : பெண்ணிடம் வரதட்சணை கொடுமை செய்த கணவர், மாமியார், நாத்தனார் உட்பட ஆறு பேருக்கு இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது நாசரேத் மேலவெள்ளமடத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகள் முத்துமாலை என்ற பாப்பாத்தி(30). இவருக்கும் பாளையங்கோட்டை சுப்பையா மகன் சங்கருக்கும் திருமணம் நடந்தது. சங்கரும் அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு பாப்பாத்தியை கொடுமை படுத்தினார்களாம்.

இது குறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாப்பாத்தி புகார் செய்தார். எஸ்.ஐ., காளீஸ்வரி வழக்குப்பதிவு செய்து பாப்பாத்தி கணவர் சங்கர்(40), மாமியார் பத்ரகாளி(68), கணவரின் சகோதரர்கள் சண்முகசுந்தரம்(48), ஆறுமுகசேகர்(43), அருணாசலம் ரவி(46), சகோதரிகள் குமரேசன் மனைவி செல்வி(42), மாடசாமி மனைவி முத்துமாலை(38) ஆகியோரை கைது செய்தனர்.

வழக்கு சாத்தான்குளம் கோர்ட்டில் நடந்தது. இதில் அருணாசலரவி இறந்துவிட்டார். வழக்கை விசாரித்த சாத்தான்குளம் நீதிபதி ஜெயசிங் ஆறு பேருக்கும் தலா இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் 13ஆயிரத்து 300ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். வரதட்சணை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு சிறைத் தண்டனை விதித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியில் இருப்பது போல ஒவ்வொரு இந்திய மருமகளும் கணவனின் ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் இந்தியாவில் வரதட்சணை என்ற வழக்கமே ஒழிந்திருக்கும். மருமகள்கள் அனைவரும் ஒன்றுபட்டால் எல்லா மருமகள்களும் வளமாக வாழலாம். அதனால் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மருமகளும் இந்த புனிதப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.


தைரியமான மற்றொரு எதிர்கால மருமகள்

திருமணத்தை நிறுத்திய பிளஸ்2 மாணவி; போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு எழுதினார் மார்ச் 24,2011 தினமலர்

கோவை : கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்திய பிளஸ்2 மாணவி, வீட்டை விட்டு வெளியேறி, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தேர்வு எழுதினார். கோவை கணபதி பகுதியில் வசிப்பவர் கணேசன்(47); வியாபாரி. [...]

வாழ்த்துக்கள்!


பொய் வழக்குப்போடும் மருமகளை தண்டிப்பது எப்படி?

முந்தைய பதிவில் வாசகர் ஒருவர் முக்கியமான ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அவருக்கு விளக்கம் அளிப்பதற்காக இந்தப் பதிவு. மருமகள்களே நீங்களும் கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். சிலசமயம் உங்களிடம்கூட இதுபோன்ற கேள்வியை யாராவது கேட்பார்கள்.
பின்வரும் கேள்வியைப் படித்துக்கொள்ளுங்கள். பிறகு கேள்வியிலுள்ள முக்கியமான விஷயங்களுக்கு ஒவ்வொன்றாக பதில் காண்போம்.

abiramamnatham said...

சஹோ தாங்கள் கூறுவது சரிதான் . எனினும் இந்த சட்டத்தை எத்தனை பேர் சரியாக பயன் படுத்துகின்றார்கள்? எத்தனை பேர் இதனை முறைகேடாக பயன் படுத்துகின்றார்கள் ? சரி அவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவோரை எவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் . எனென்றால் வரதட்சணை கொடுமை என்று ஒரு பெண் பொய்யான வழக்கு கொடுத்தால் மாப்பிள்ளை வீட்டார்கள் குடும்பத்துடன் கைது செய்யப்படுவார்கள் .ஆனால் மாப்பிள்ளை வீட்டார் நிரபராதிகள் என்றால் சட்டம் எற்றுக்கொள்ளாது.இதனால் நிரபராதிகலான மாப்பிள்ளை வீட்டார் நீதிமன்றம் என்று அலைய வேண்டும் .இதற்கு தாங்களின் கருத்து மற்றும் ஆலோசனைகள் என்ன?



மாப்பிள்ளை வீட்டார் நிரபராதிகள் என்றால் சட்டம் ஏற்றுக்கொள்ளாது.

இந்தியாவில் பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டார் (99%) வரதட்சணை வாங்கும் அல்லது மருமகளை கொடுமை செய்யும் குற்றவாளிகளே. அதனால்தான் நீங்கள் கூறியிருப்பதுபோல மாப்பிள்ளை வீட்டார் நிரபராதி என்று சொன்னாலும் சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. பொய்யை நீங்களே ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள் பிறகு சட்டம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? இது எப்படி பொய் என்று பின்வரும் பதில்களில் விளக்கமாகப் புரியும்.

எனினும் இந்த சட்டத்தை எத்தனை பேர் சரியாக பயன் படுத்துகின்றார்கள்? எத்தனை பேர் இதனை முறைகேடாக பயன் படுத்துகின்றார்கள் ?

இந்த சட்டங்கள் அனைத்தும் 100% சரியாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பல மருமகள்கள் தங்களது அறியாமையால் இதை எப்படி பக்குவமாகப் பயன்படுத்துவது என்று தெரியாமல் தவறு செய்துவிடுகிறார்கள். அதற்கு சிறு உதாரணம் சொல்கிறேன்: கணவனிடம் உள்ள பொருட்களை பெறுவதற்கு IPC406 என்ற குற்றப்பிரிவையும் சேர்க்க வேண்டும். ஆனால் தவறுதலாக சில மருமகள்கள் வெறும் IPC498A மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டம் இவற்றை மட்டுமே பயன்படுத்துவதால் கணவன் வீட்டார் எங்களிடம் மருமகளின் பொருட்கள் எதுவுமே இல்லை. அதனால்தான் பாருங்கள் IPC406 இல்லை. வெறும் 498A மட்டும்தான் இருக்கிறது. அதனால் இது பொய் வழக்கு என்ற அவதூறு பேசிவருகிறார்கள்.

உங்களைப்போல இந்திய தலைமை நீதிபதியும் ஒருமுறை மருமகள்கள் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதாக கூறியதற்கு மருமகளின் அறியாமைதான் இதுபோன்ற மாயத்தோற்றத்திற்குக் காரணம் என்று தேசிய மருமகள் வாரியத் தலைவி இந்திய தலைமை நீதிபதிக்கே மறுப்பு தெரிவித்துள்ளார். நீதிபதி அதற்கு எதுவும் மறுப்பு சொல்லவில்லை. தலைவி சொல்லியதுதான் உண்மை.

Faced with adverse comments from the CJI, National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said. (The Times of India, 1Feb 2009)

சரி அவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவோரை எவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் .

இதுதான் மிகமுக்கியமான கேள்வி.

எந்த மருமகளும் இந்த சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதில்லை.

மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் என்பவை முழுவதும் மருமகள்களுக்காகவே இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டவை.

இந்தியாவில் இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் சட்டமாமேதைகளின் ஆலோசனைப்படி இயற்றப்பட்டு பிறகு பார்லிமெண்டின் இரு அவைகளிலும் பரிசீலனை செய்யப்பட்டு அகில இந்திய உறுப்பினர்கள் அனுமதித்த பிறகே சட்டமாகிறது. அதனை கடைசியில் ஜனாதிபதி கையெழுத்திட்டு அனுமதி தந்த பிறகே நடைமுறைக்கு வருகிறது.

இப்படி இந்திய மாமேதைகளின் கடினமான பரிசீலணைக்குப் பிறகே நடைமுறைக்கு வரும் சட்டம் மருமகள்கள் முறைகேடாகப் பயன்படுத்தும் விதத்திலா இருக்கும்? இந்திய சட்டமேதைகளையும், தலைவர்களைம் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்.

இந்த சட்டங்களை நீங்கள் ஒருமுறை கூர்ந்து கவனித்துப் படித்துப்பார்த்தால் இந்திய மருமகள்கள் அனைவரும் அப்பாவிகள், தவறே செய்யத் தெரியாதவர்கள் என்று உங்களுக்கே புரிய ஆரம்பிக்கும்.

1. 1961ல் வரதட்சணை தடுப்புச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றினார்கள். வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என்று இந்த சட்டத்தில் எழுதிய சட்டமேதைகள் மருமகள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்திருந்தாலும் மருமகள் மீதோ, அவரது குடும்பத்தார் மீதோ எந்தவித சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அழுத்தமாக எழுதிவைத்திருக்கிறார்கள். அதே சமயம் கணவன் தன்னிடம் வரதட்சணை கேட்டதாக மருமகள் புகார் கொடுத்தால் கணவன்தான் தான் வரதட்சணை கேட்கவில்லை அல்லது வாங்கவில்லை என்று தன்னை நிரபராதி என்று நிரூபித்துக்கொள்ளவேண்டும். மருமகள் எந்தவித ஆதாரத்தையும் காட்டத்தேவையில்லை.

இதிலிருந்து ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். சட்டத்தை இயற்றிய மாமேதைகள் மருமகள்கள் இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தமாட்டார்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள். பிறகு உங்களது கேள்வி எப்படி எடுபடும்?

2. கணவன்களின் கொடுமை அதிகரித்துக்கொண்டே போனதால் 1984ல் மீண்டும் நமது சட்ட மாமேதைகளும், பெருந்தலைவர்களும் IPC498A என்ற சிறப்புச் சட்டத்தை இயற்றினார்கள். இந்த சட்டத்திலும் கணவனைச் சார்ந்த யார் மீதுவேண்டுமானாலும் மருமகள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி குற்ற வழக்குத் தொடுக்கலாம் என்ற முழு உரிமையும் கொடுத்திருக்கிறார்கள். அதோடுமட்டுமல்லாமல் மருமகள் பொய்வழக்குத் தொடர்ந்தால் அதற்கும் தண்டனை உண்டு என்று இந்த சட்டத்தில் ஒரு வரிகூட எழுதப்படவில்லை என்பதுதான் இந்த சட்டத்தின் சிறப்பம்சம். மருமகள்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள் என்ற நம்பிக்கையினால்தான் இப்படி ஒரு உரிமையைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தியத் தலைவர்களின் நம்பிக்கை தவறு என்கிறீர்களா?

3. இந்த சட்டங்கள் இருந்தாலும் கணவன்களின் கொடுமை தாளமுடியாமல் மருமகளின் நலன் விரும்பும் நமது தலைவர்கள் மீண்டும் 2005ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்று ஒன்றைக் கொண்டுவந்தார்கள். அதிலும் மருமகள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகும் எளியோர்கள் என்றும், கணவன்கள் அனைவரும் வன்முறை மட்டுமே செய்யும் கொடிய மிருகங்கள் என்றும் வரையரை செய்திருக்கிறார்கள்.

இப்படி எல்லா சட்டங்களிலும் மருமகள்களுக்கு முழுச்சுதந்திரமும், நல்லவர்கள் என்ற முத்திரையையும் நம்நாட்டு சட்டமேதைகளும், தலைவர்களும் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அது அவ்வளவு சாதாரண விஷயமா?

நீங்கள் கூறுவது போல மருமகள்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால் 1961 முதல் 2005 வரை எப்படி இதுபோல மருமகள்களுக்கு மட்டுமே சாதகமாக பல சட்டங்களை இயற்றியிருப்பார்கள்? நம்நாட்டுத்தலைவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்துதான் சட்டத்தை இயற்றுவார்கள்.

உண்மை நிலவரம் நாட்டில் இப்படி இருந்துகொண்டிருக்கும்போது மருமகள்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் அவர்களை எப்படி தண்டிப்பது என்று அபாண்டமாக கேள்வி கேட்டிருக்கிறீர்களே?

உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன். சிந்தித்துப் பாருங்கள். அப்போதுதான் மருமகள் அனைவரும் அப்பாவிகள், சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தத் தெரியாதவர்கள், கணவன்கள்தான் தவறு செய்பவர்கள் என்று உங்களுக்கே புரியும்.

1. 1961 முதல் இன்றுவரை மருமகள்களுக்காக அடுக்கடுக்காக பல சிறப்புச் சட்டங்களை இயற்றிய அரசாங்கம் நீங்கள் கற்பனையாகக் கூறும் நிரபராதி மாப்பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தையும் இயற்றவில்லையே? அது ஏன்?

மாப்பிள்ளை வீட்டார் பக்கம் நியாயம் இல்லை. அதனால்தான் அரசாங்கம் இன்றுவரை ஒரு சட்டம் கூட இயற்றவில்லை. ஆனால் மருமகள்கள் அனைவரும் நல்லவர்கள். 1961ல் இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்புச்சட்டம் முதல் 2005ல் வந்துள்ள குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்வரை 1984ல் வந்த IPC498A உட்பட எந்த சட்டத்தையும் இன்றுவரை தவறாகப் பயன்படுத்தவில்லை. அதனால்தான் மருமகள்களின் பாதுகாப்பிற்காக அடுத்தடுத்து பல சட்டங்கள் வந்துள்ளன.

2. இங்கே இந்த பதிவில் நீங்கள் கேட்டிருப்பதுபோல உண்மையாகவே மாப்பிள்ளை வீட்டார் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் அரசாங்கத்திடம் இதுவரை தங்களுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தையும் கேட்கவில்லை?

மருமகள்கள் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். நிரபராதி கணவன்களை சிறையில் அடைக்கிறார்கள் என்று இந்த பதிவிற்கே நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்கும்போது உண்மையாக பாதிக்கப்பட்டிருந்தால் மாப்பிள்ளை கூட்டத்தார் அரசாங்கத்திடம் என்றோ இந்தக் கேள்வியை கேட்டு தங்களுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தை கொண்டுவந்திருப்பார்களே! அதை இதுவரை யாரும் செய்யவில்லையே? அது ஏன்?

தவறு செய்யாமல் இருந்தால்தானே மாப்பிள்ளை தரப்பினர் தைரியமாக அரசாங்கத்திடம் கேட்கமுடியும்! அதனால் நீங்கள் கூறும் மாப்பிள்ளை கூட்டம் 100% தவறு செய்கிறார்கள் என்று நிரூபணமாகிவிட்டதல்லவா? அதனால்தான் தாங்கள் நிரபராதி என்று சொன்னாலும் யாரும் காதில் வாங்கிக்கொள்ளாமல் மாப்பிள்ளை கூட்டத்தை சிறையில் தள்ளுகிறார்கள். இதுதான் உண்மை. இதற்கு மருமகள்கள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது.

3. ஏதோ சில வழக்குகளில் போனால் போகட்டும் என்று கணவனை மன்னித்து விடுவித்தால் அதை பொய் வழக்கு என்று சொல்வது முறையாகுமா?அப்படியே நீங்கள் கூறுவதுபோல மருமகள் பொய் வழக்குப்போட்டிருந்தால் நீதிமன்ற விசாரணையில் உண்மை தெரிந்துவிடும். அப்படியிருக்கையில் பொய் வழக்குப் போட்டதாக எத்தனை மருமகள்கள் நீதிமன்றத்தால் இதுவரை தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்?

4. இந்தியாவில் இருக்கும் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் முதல், மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை வரதட்சணை வழக்குகள் செல்கின்றன. ஆனால், இதுவரை எந்த நீதிமன்றமும் பொய் வழக்கிற்காக மருமகளை தண்டித்து சிறைக்கு அனுப்பியதாக சரித்திரமே கிடையாது. அப்படியென்றால் நீதிமன்றங்கள் என்ன மருமகள்கள் போடும் பொய் வழக்குகளை வேலை வெட்டியின்றி நடத்திக்கொண்டு மருமகள்களே சபாஷ்! நன்றாகப் பொய்வழக்குப் போடுங்கள் என்று பொய் வழக்குகளை ஆதரித்துக்கொண்டிருக்கின்றனவா? இந்திய நீதிமன்றங்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? கண்டிப்பாக இந்திய நீதிமன்றங்களை குறைத்து மதிப்பீடு செய்துவிடாதீர்கள்.

5. அப்படியே நீதிமன்றங்கள் பொய் வழக்குப்போட்ட மருமகளை விட்டுவிட்டாலும் அந்த வழக்கிலிருந்து விடுதலையான நீங்கள் சொல்லும் “நிரபராதி கணவன்கள்” எத்தனை பேர் மறுவழக்குத் தொடர்ந்து பொய்யான புகார் கொடுத்த மருமகள் மீதும், அதற்குத் துணையாக பொய் வழக்குப்போட்ட காவல்துறை மீதும், பொய் வழக்கை தங்கள் மீது திணித்து வாழ்வை அழித்து சிறைக்கு அனுப்பிய அரசாங்கத்தின் மீதும் மானநஷ்ட வழக்கு போட்டு வெற்றிபெற்றிருக்கிறார்கள்? அல்லது குறைந்தபட்சம் வழக்காவது தொடர்திருக்கிறார்களா?

இதற்கு உங்களிடம் இருக்கும் பதில் “ஒருவர்கூட இல்லை” என்பதுதான். நான் நிரபராதி என் மீது பொய் வரதட்சணை வழக்குப்போட்டுவிட்டார்கள் என்று சும்மா புலம்பிக்கொண்டிருக்கும் சிலரை பார்த்துவிட்டு நீங்கள் மருமகள்களைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதனால் மருமகள் பொய்வழக்குப்போடுகிறார், அவரை தண்டிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்காமல் கணவன்களையும், அவர்களது குடும்பத்தாரையும் மருமகள்களிடம் சரணடையச் செய்வது எப்படி என்று மாத்தியோசித்தால் கணவன்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நல்லது என்று நான் நினைக்கிறேன்.

அறிவுப்பூர்வமாக தாங்கள் எழுப்பிய கேள்விக்கு மிக்க நன்றி. இதுபோல தங்களின் கருத்துக்களையும், கேள்விகளையும் தயங்காமல் எழுதுங்கள். தங்களின் கேள்வி மூலம் பல மருமகள்கள் பலன் பெறுவார்கள். நன்றி!

வாழ்த்துக்கள்!


மருமகளே குதிரை சவாரி செய்யக் கற்றுக்கொள்

இந்தியாவில் மருமகள்களுக்கு காலம் காலமாக நடந்துவரும் வரதட்சணைக் கொடுமை உலகத்திற்கே தெரிந்த விஷயம். படித்தவர், படிக்காதவர், பணக்காரன், ஏழை, அரசியல்வாதி, அரசு அலுவலர், வியாபாரி, திரைத்துறைக் குடும்பம், உள்நாட்டு மருமகள், வெளிநாட்டு மருமகள் என எல்லா இடங்களிலும் மருமகள்களுக்கு எதிரான வரதட்சணை வன்முறை இந்தியாவில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.

இதனைத் தடுப்பதற்கு 1961லேயே வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் மருமகள்கள் அவற்றை சரியாகப் பயன்படுத்தாததால் இன்றுவரை மருமகள்களுக்கு எதிரான இந்தக் கொடுமை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்தாத மருமகள்களை தட்டி எழுப்புவதற்காகவே மீண்டும் 1984ல் IPC498A என்ற சட்டத்தையும், 2005ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ற சிறப்புச் சட்டத்தையும் மருமகள் நலம் போற்றும் பெண்கள் நலவாரியத்தின் அயராத முயற்சியால் அரசாங்கம் அமலுக்குக் கொண்டுவந்தது.

ஆனால், என்ன பிரயோஜனம் இன்றும் பின்வரும் செய்தியைப் போல பல கொடுமைகளை நாம் படித்து அழவேண்டியிருக்கிறது.

மார்ச் 16,2011 தினமலர்

ஐதராபாத் : வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, போலீசில் புகார் செய்துள்ளார்.


மாமனார் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, ஐதராபாத் நகரைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் ஸ்ரீஜா தெரிவித்தார். பின்னர், ஐதராபாத் பஷீர்பாக் பகுதி மகளிர் காவல் நிலையத்திற்கு ரகசியமாக வந்த சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா, தன் புகாரை மகளிர் போலீஸ் நிலைய ஆய்வாளரிடம் வழங்கினார். இதையடுத்து, ஸ்ரீஜாவின் கணவர் ஷிரிஸ் பரத்வாஜ், அவரது தாய், தந்தையை, போலீசார், 14ம் தேதி இரவு கைது செய்தனர்.


காதல் திருமணம்: சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் ஷிரிஸ் பரத்வாஜை காதல் திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவியின் கடும் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜா, பரத்வாஜ் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீஜாவிற்கு குழந்தை பிறந்த பின், சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்த், சிரஞ்சீவி - ஷிரிஸ் பரத்வாஜ் ஆகிய இரு குடும்பத்தினரிடையே பேசியதால் எதிர்ப்பை கை விட்ட சிரஞ்சீவி, மகள் ஸ்ரீஜாவை தன் குடும்பத்தில் இணைத்து கொண்டார்.


மருமகள்களே,

மேலுள்ள செய்தியிலிருந்து ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். சட்டங்களை உங்கள் கைகளில் அரசாங்கம் என்றோ கொடுத்துவிட்டது. அவற்றை எங்கு, எப்போது, எப்படி பயன்படுத்தவேண்டும் என்று புத்திசாலித்தனமாக நீங்கள்தான் முடிவுசெய்து கொள்ளவேண்டும். வருமுன் காப்பதே நல்லது! கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்து எந்த புண்ணிமும் இல்லை! பிறகு அரசாங்கத்தை குறை கூறி எந்த பலனும் இல்லை.

உங்கள் திருமண வாழ்க்கைப் பயணத்திற்காக வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் என்ற சக்திமிக்க சாட்டையை மருமகள்கள் கையில் திருமணத்தன்றே அரசாங்கம் கொடுத்துவிடுகிறது. குதிரை கட்டுக்கடங்காமல் ஓடுவதற்கு முன்பே இரண்டு சாட்டையடி கொடுத்து அதன்மீது சவாரி செய்தால்தான் பயந்து உங்கள் கட்டுப்பாட்டிற்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கும். கட்டுக்கடங்காமல் குதிரை அறுத்துக்கொண்டு ஓடிய பின்பு சாட்டையை சுழற்றினால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது.

குதிரை எதுவென்று மருமகள்களுக்கு மட்டும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்!

வாழ்த்துக்கள்!


ஐயோ பாவம்! ஆணியைக்கூட பிடுங்க முடியாத இந்தியக் கணவன்கள்

மருமகள்களே,

உங்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி! அரசாங்கமும், நீதிமன்றங்களும்
எப்போதும் மருமகள்பக்கம்தான் இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்கு மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது. கவனமாகப் படியுங்கள்.

கணவன் மீது வரதட்சணை வழக்கு தொடுக்கும் மருமகள்களுக்கு எதிராக
சமீப காலமாக கணவன்கள் வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3ன் கீழ் வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்துவருகிறார்கள். அதனால் மருமகள்கள் சற்று பயந்துபோய் இருந்தார்கள் . இப்போது அவர்களுக்கு தெம்பூட்டும் வகையில் இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்த செய்தியை நன்றாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 3, 4, 7 இவற்றை ஒருமுறை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். மருமகள்களுக்காக அந்த முக்கியப் பிரிவுகளை மட்டும் கீழே தந்திருக்கிறேன். படித்து கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)


3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more,

4. Penalty for demanding dowry.-
If any person demands directly or indirectly, from the parents or other relatives or guardian of a bride or bridegroom as the case may be, any dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than six months but which may extend to two years and with fine which may extend to ten thousand rupees


மேலுள்ள சட்டப் பிரிவுகளில் பார்த்தீர்களா? பிரிவு 3ன்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதுவரை மருமகள்கள் கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் இந்த வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தி புகார் கொடுக்கும்போது திருமணத்திற்கு முன்பே கணவன் வீட்டார் வரதட்சணை கேட்டதாகவும், தாங்கள் அதைக் கொடுத்துதான் திருமணம் செய்ததாகவும் புகார் எழுதிக் கொடுத்து வருவதுதான் வழக்கம். அதற்கேற்றார்போல காவல்துறையும் கணவன் மீது மட்டுமே வரதட்சணை கேட்டதற்காக பிரிவு 4 மற்றும் வரதட்சணை பெற்றுக்கொண்டதற்காக பிரிவு 3 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துவந்தார்கள்.

ஆனால் பிரிவு 3ல் உள்ள சட்டத்திற்கு எதிராக நீங்கள் வரதட்சணை கொடுத்ததாக தைரியமாக புகாரில் எழுத்துமூலமாக எழுதித்தந்தாலோ அல்லது பல லட்சங்களும், கிலோ கணக்கில் தங்க நகைகளும் வரதட்சணையாக கொடுத்ததாக செய்தித்தாளில் செய்தி வெளியிட்டாலோ யாரும் அதைப் பற்றி கவலையே படமாட்டார்கள்.

ஆனால், வெறிபிடித்த இந்தியக் கணவன்களின் கூட்டம் சமீபத்தில் நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சனையை பெரிதாக்கி வரதட்சணை கொடுப்பதும் சட்டப்படி குற்றம். உயர்கல்வி கற்ற என்னுடைய மனைவி சட்டத்திற்கு எதிராக வரதட்சணை கொடுத்ததாக தானாகவே புகாரில் எழுதித்தந்திருக்கிறார். அதனால் அவர் மீதும் பிரிவு 3ன் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி மருமகள்களுக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3ன் கீழ்வழக்குப் பதிவு செய்ய முயற்சித்து வந்தார்கள். சில நீதிமன்றங்களும் இந்த வெறிபிடித்த கணவன்களின் பேச்சைக் கேட்டு மருமகள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் பெருமைக்குரிய மருமகள் ஒருவர் இந்தப் பிரச்சனையை இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று கணவன் மீது வரதட்சணை வழக்குப்பதிவு செய்யும் தனது உரிமையை வெற்றிகரமாக நிலை நாட்டியிருக்கிறார். மருமகள்கள் வரதட்சணை கொடுத்ததாகச் சொன்னாலும் சட்டங்கள் கணவனை மட்டுமே தண்டிக்கவேண்டும் என்று சட்டத்திற்கு வழிகாட்டியிருக்கிறார்.

இந்திய மருமகள்களுக்குச் சாதகமாக தீர்ப்பு சொல்வதற்காக நீதிமன்றமும் வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 7-ஐ காரணம் காட்டியிருக்கிறது. அதாவது பிரிவு 7ன் படி வரதட்சணை தொடர்பாக புகார் கொடுப்பவர் மீது இந்த சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியாது. இதைத்தான் பல மருமகள்கள் இதுவரை சாதகமாக பயன்படுத்தி வருகிறோம் என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்காது!

7. Cognisance of offences.- (2) Nothing in Chapter XXXVI of the Code of Criminal Procedure, 1973 (2of 1974), shall apply to any offence punishable under this Act.)

Notwithstanding anything contained in any law for the time being in force, a statement made by the person aggrieved by the offence shall not subject such person to a prosecution under this Act.


இந்த சட்டப்பிரிவு 7ல் உள்ள நுணுக்கத்தை நான் உங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்கிறேன். குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.


ஒரு அரசு அலுவலகத்தில் உங்களுக்கு ஒரு பணி நடைபெறவேண்டுமென்றால் அந்த அலுவலர் லஞ்சம் கேட்டால் நீங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும். நான் லஞ்சம் கொடுக்கமாட்டேன் வேறு அலுவலகத்தில் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு மின்சார அலுவலர் லஞ்சம் கேட்டால் நீங்கள் லஞ்சம் கொடுக்க மாட்டேன் போ என்று சொல்லிவிட்டு குடிநீர் வாரிய அலுவலகத்தில் மின்சாரம் கேட்கமுடியாது. அதனால் புகார்தாரர் வேறுவழியின்றி லஞ்சம் கொடுக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார். அதனால் லஞ்ச வழக்குகளில் லஞ்சம் கொடுப்பவரை விட லஞ்சம் கேட்பவர்தான் குற்றவாளி என்று சொல்லலாம்.


ஆனால் வரதட்சணை என்று வரும்போது, திருமணத்திற்கு முன்பே ஒருவன் வரதட்சணை கேட்டால் அவனை தூக்கியெறிந்துவிட்டு வேறு ஒரு ஆண்மகனை தேடிக்கொள்ளலாம். அதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இது லஞ்ச வழக்குப்போன்ற விவகாரம் கிடையாது. இந்த ஆள் இல்லையென்றால் வாழ்க்கையில் நமக்கு திருமணமே நடக்காது என்று சொல்லமுடியாது.


அதனால் இந்த விஷயத்தில் வரதட்சணை கேட்பவனும் அதை ஏற்றுக்கொண்டு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்பவளும் சரி சமமாக குற்றவாளியாகக் கருதப்படவேண்டும் என்று புத்திசாலித்தனமாக யோசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். நீதிமன்றங்களில் இப்படியெல்லாம் யோசித்துவிடுவார்களோ? என்று மருமகள்கள் கொஞ்சமும் கலங்கவேண்டாம். உங்களுக்கு தெம்பூட்டுவதற்காகத்தான் இந்த பின்வரும் செய்தியைத் தந்திருக்கிறேன்.



Hindustan TimesNew Delhi, March 09, 2011

A woman and her family members cannot be treated as accused under the Dowry Prohibition Act for giving dowry at the time of marriage, the Supreme Court has said.


A bench of Justices HS Bedi and CK Prasad upheld the Delhi High Court verdict that quashed a criminal case against a girl stating a dowry harassment victim was protected under the law and, could not be charged under the Act.


Two separate benches of the Delhi HC had taken divergent views on the issue. While Justice SN Dhingra (since retd) held the woman and her family could be prosecuted for giving dowry, Justice Ajit Bharihoke had said it could not be done.


The latter judgment held that section 7 of the Dowry Prohibition Act provided protection to the person who was a complainant under the law. Section 3 of the Act makes giving, accepting or abetting dowry an offence.


The SC order clarifies the legal position regarding the culpability of an alleged dowry-giver bride. It dismissed the appeal against Justice Bharihoke’s verdict filed by the husband who claimed that the judge could not have delivered it as the law was settled by Justice Dhingra.


The bench, however, dismissed the petition and said, “The girl is a victim and you want her to be prosecuted also. Then 498A (dowry harassment section) would be rendered nugatory.”

Vijary Aggarwal counsel for the woman who faced the case for giving dowry, contended there should be harmonious construction of the Act.


Justice Bharihoke had in October 2010 quashed a metropolitan magistrate’s order that directed registration of a case under the Act against a woman. The case was registered following a complaint made before the court by the husband.


Cases against women

Delhi police issues circular in 2007 asking its officers to register cases under the Dowry Act against women who marry despite dowry demand


Mar 19, 2010: Delhi court orders case against a woman saying she had willfully given dowry


Dec 4, 2008: Noida court orders case against woman.



சட்டங்களும், நீதிமன்றங்களும், அரசாங்கமும் எப்போதுமே மருமகள் பக்கம்தான் என்று தெரியாத முட்டாள் கணவன்கள் மருமகள்களுக்கு எதிராக முட்டி மோதிப் பார்த்து கடைசியில் ஆணியைக் கூட பிடுங்க முடியவில்லை. இவர்கள் எங்கே மருமகள்களுக்கு எதிராக சட்டத்தை பயன்படுத்தப் போகிறார்கள்?! அதனால் மருமகள்களுக்கு அடங்காத கணவனுக்கெதிராக வரதட்சணை சட்டங்களை கொஞ்சமும் தயங்காமல் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.

வரதட்சணை தடுப்புச்சட்டம் பிரிவு 7 இருக்கின்றவரையிலும், நீதிமன்றங்கள் அதை ஆராய்ந்து அறியாமல் அப்படியே படித்து பொருள் கொள்ளும் வரையிலும் மருமகள்களுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. வானமும், பூமியும் உள்ளவரை வரதட்சணை வழக்குகளில் உள்ள இந்த இரண்டு நடைமுறையிலும் எந்தவித மாற்றமும் ஏற்படாது. அதுவரை இந்திய மருமகள்களுக்குக் கொண்டாட்டம்தான்!

அதனால் கணவனுக்கெதிராக புகார் கொடுக்கும்போது சிக்கனமாக இல்லாமல் புத்திசாலித்தனமா கொஞ்சம் அதிகமாகவே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ததாக எழுதிக்கொடுங்கள். அப்போதுதான் நீதிமன்றங்கள் நீங்கள் சொல்வதில் பாதி அளவாவது கணவனிடமிருந்து வாங்கிக்கொடுக்கும்.

மருமகள்களுக்கு பாதுகாப்பாக வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு-7 இருக்கின்ற வரையில் மருமகள்களுக்கு அடங்கி நடக்காத கணவன்களுக்கு 71/2தான்!

வாழ்த்துக்கள்!