தில்லி, ஜூன் 10: விவாகரத்து பெறுவதற்காக நடைமுறைகள் எளிதாக்கப்படவுள்ளன. எனவே, இனி அதிக நாள்கள் காத்திராமல் விரைவில் விவாகரத்து பெறமுடியும்.இதற்கான சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.இ தன்படி, இந்து திருமணச் சட்டம் 1955 மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் 1954 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்படுகின்றன.
இனி சேர்ந்து வாழவே முடியாது என்ற கட்டத்திலும், ஜோடியில் ஒருவர் காணாமல் போய்விடுவது, கொடுமைப்படுத்துவது ஆகிய பிரச்னைகளை மையமாகக் கொண்டு ஜோடியில் ஒருவர் மட்டும் விவாகரத்து கோரும் போது, இனி எளிதாகவும், விரைவாகவும் விவாகரத்து கிடைக்கும்.
தில்லியில் வியாழக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின், செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியது:கொடுமைப்படுத்தப்படு வது அடிப்படையில் விவாகரத்துக் கேட்பவர்கள், ஒருவர் விவாகரத்து கோரி மற்றொருவர் விவகாரத்து வேண்டாம் என்ற நினைத்து வழக்கைத் தாமதப்படுத்துவது போன்ற பிரச்னைகளை தீர்க்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சட்டக் குழு மற்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலின பேதம், கொடூரமாக நடந்து கொள்வது, வேறு மதத்துக்கு மாறுவது, சராசரி மனிதராக செயல்படாததது, குணப்படுத்த முடியாத தொழுநோய், பால்வினை நோய் போன்றவை விவாகரத்து பெற புதிய காரணங்களாக சேர்ந்துக் கொள்ளப்பட்டுள்ளன.தம்பதியர் இருவரும் ஒருமித்து விவாகரத்து பெறும் இந்து திருமணச் சட்டப் பிரிவு 13-பி, சிறப்புத் திருமணச் சட்டப் பிரிவு 28 ஆகியவற்றிலும் சிறு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவாகரத்து கோரி தம்பதி இருவரும் ஒரு மனதாக மனு செய்யும் போது, அந்த மனு 6 மாதத்துக்குள் திரும்பப் பெறப்படாவிட்டால் நீதிமன்றம் விரைவில் விசாரித்து விகாரத்து வழங்கும். அதிகபட்சம் 18 மாதங்களுக்குள் அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டு விடும். இருவருமே விவாகரத்து கோரும்போது அவர்கள் விரைவில் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளவும், கொடுமைக்கு உள்ளாகும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்றார் அம்பிகா சோனி.இந்த சட்டத் திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் பெற வேண்டும். அதன் பின்னரே நடைமுறைக்கு வரும்.
இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி சட்ட நடைமுறைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். அதற்காக மற்ற மதத்தைச் சேர்ந்த மருமகள்கள் வருத்தப்படவேண்டாம். நீங்கள் உங்களுடைய விவாகரத்து வழக்குகளை துரிதப்படுத்த வழக்கம்போல IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற வரதட்சணைத் தடுப்புச் சட்டங்களை பயன்படுத்தலாம். இந்த வழிமுறைக்கு ஈடாக இந்தியாவில் எந்த சட்ட திருத்தங்களும் விவாகரத்து வேலையை எளிதாக செய்து முடிக்க முடியாது.
என்னுடைய சொல்லில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையென்றால் சில மாதங்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த ஆயிஷா-சோயப் மாலிக் விவாகரத்து விஷயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். முதலில் திருமணமே நடக்கவில்லை என்று அடித்துச் சொல்லிய சோயப் மாலிக் IPC498A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ததும் வாலை சுருட்டிக்கொண்டு நடக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்வதாக ஒப்புக்கொண்டு எல்லா பேப்பர்களிலும் கையெழுத்துப்போட்டு தப்பித்தால் போதும் என்று ஓடியேவிட்டாரல்லவா.
வேறு நாட்டுக் குடிமகனே இந்திய சட்டத்தைப் பார்த்து அஞ்சும்போது இந்தியக்கணவன்கள் முதுகெலும்பற்ற பூச்சி போல அடங்கி ஒடுங்கிவிடுவார்கள். அதனால் விவாகரத்து சட்டங்களில் திருத்தம் வந்தாலும் வராவிட்டாலும் இந்திய மருமகள்கள் கவலைப்படவேண்டியதில்லை. உங்களுக்காகவே சர்வரோக நிவாரணி போல எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற சட்டங்கள் இருக்கின்றன. தயங்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்ட சட்டதிருத்தத்திற்கு மருமகள்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து இந்திய அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்தி இந்திய மருமகள்களின் வாழ்வில் ஒளியையும் வலிமையையும் ஏற்படுத்தவேண்டும்.
மனமொத்து விவாகரத்து செய்தாலோ அல்லது நீங்கள் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தாலோ உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் கொடுக்கவேண்டிய முக்கியமான கண்டிப்பான நிபந்தனை என்னவென்றால் விவாகரத்துப் பெறப்போகும் கணவன் அவனது பெயரில் அதிகபட்ச மதிப்பிலான ஒரு ஆயுள் காப்பீடு எடுக்கவேண்டும். அதற்கான மாதாந்திர தவணையையும் கணவனே கட்டவேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிடுங்கள். மறக்காமல் அந்தக் காப்பீட்டுத் தொகைக்கான பயனாளியாக (Beneficiary, Nominee) உங்கள் பெயரை போடவேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லுங்கள். இதை எழுத்து மூலமாக உறுதிபடுத்திய பின்புதான் விவாகரத்து கொடுக்கப்படும் என்று கண்டிப்புடன் சொல்லிவிடுங்கள்.
விவாகரத்தின்போது உங்களுக்கு ஒரு குறிப்பிட்டத்தொகையாக மாதத்தோறும் ஜீவனாம்சம் கிடைக்கும். ஆனால் விவாகரத்திற்குப் பிறகு அந்த ஜீவனாம்சம் கொடுக்கும் முன்னாள் கணவன் அற்ப ஆயுளில் மண்டையைப்போட்டுவிட்டால் ஜீவானாம்சம் கிடைக்காமல் போய்விடுமல்லவா? அதனால் அவனுக்கு ஆயுள் காப்பீடு செய்திருந்தால் அவன் மண்டையைப் போட்டுவிட்டாலும் அந்தப் பணம் உங்களை வந்து சேருமல்லவா.
வரதட்சணைப் புகாரில் எப்படி மாமியார் நாத்தனார் பெயர்களை மறக்காமல் சேர்க்கிறீர்களோஅதுபோல விவாகரத்து நிபந்தனையில் இந்த ஆயுள் காப்பீடு மேட்டரை மறக்காமல் சேர்த்துவிடுங்கள். விவாகரத்து ஆனபின்பு, நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்த களைப்பில் கணவன் மண்டையைப் போட்டாலும் பணத்திற்கு குறைவின்றி சந்தோஷமாக வாழலாம்.
“இந்தியக் கணவன் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்”. இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கும் அவற்றை இயற்றியவர்களுக்கும் மறக்காமல் உங்களது நன்றியை தெரிவித்துவிடுங்கள்.
வாழ்த்துக்கள்!







