"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


கணவனை “கட்டுக்குள்” வைப்பது எப்படி - இளம் மருமகளுக்கு மட்டும்

இந்தியாவில் மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் பல இருந்தாலும் அவற்றை எப்படி தக்க சமயத்தில் பயன்படுத்தி கணவனை சிறையில் அடைப்பது என்று பல மருமகள்களுக்குத் தெரிவதில்லை. இதுபோன்ற அப்பாவி மருமகள்களுக்கு ஒரு பாடமாக ஒரு புரட்சி மருமகள் தனது கணவனை விமானநிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக காவல்துறையின் துணையோடு கையில் விலங்கிட்டு சிறையில் அடைத்துவிட்டார்.

பின்வரும் செய்தியைப் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.



வரதட்சணை கொடுமை செய்துவிட்டு, விமானத்தில் அமெரிக்காவுக்கு தப்பிச்செல்ல இருந்த கணவனை, தகுந்த நேரத்தில் போலீசில் முறையிட்டு மடக்கினார் மனைவி. சாப்ட்வேர் இன்ஜியரான கணவன், மும்பை ஏர்போர்ட்டில் குடியுரிமைப்பிரிவு அதிகாரிகளிடம் சிக்கி திருதிருவென விழித்தார். இவரை விசாரணைக்காக கோவைக்கு அழைத்து வர தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.


கோவை, ராமநாதபுரம், டி.நகர், அய்யப்பன் கோவில் வீதியில் வசிப்பவர் சுமித்ரா(29); எம்.பி.ஏ., பட்டதாரி. இவருக்கும் திருச்சி, முசிறியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சரவணகுமார்(31) என்பவருக்கும், 2006ல் ஆடம்பர திருமணம் நடந்தது. பெண் வீட்டார் 50 சவரன் நகை கொடுத்து, 10 லட்ச ரூபாய் செலவில் திருமணத்தை விமரிசையாக நடத்தினர். திருமணம் நடந்த போது, சுமித்ரா கோவையிலுள்ள தனியார் வங்கியிலும், சரவணகுமார் பெங்களூரிலுள்ள விப்ரோ நிறுவனத்திலும் பணியாற்றினர். அடுத்த சில நாட்களிலேயே சரவணகுமாருக்கு அமெரிக்காவிலுள்ள நிறுவனத்தில் வேலை கிடைத்து அங்கு சென்றுவிட்டார். அதன்பின், கோவையிலுள்ள மனைவி சுமித்ராவுக்கு போன் செய்த அவர், "உனது மாத சம்பளத்தை என் வங்கிக் கணக்கில் தவறாமல் செலுத்த வேண்டும்; ஏற்கனவே, நீ வாங்கிய இரண்டு மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்து' என, கட்டளையிட்டார். பணத்தின் மீது கணவன் குறியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த சுமித்ரா, அதன்படியே செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2009, மே மாதம் கோவைக்கு வந்த சரவணகுமார், மனைவியையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும், சரவணகுமாரின் உண்மையான முகம் வெளிப்பட்டது. "நீ, படித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்க வேண்டாம்' எனக்கூறி, மனைவிக்கு அங்கேயே வேலை தேடினார். இதற்காக, சுமித்ராவின், "பயோ-டேட்டோ'வை பல்வேறு நிறுவனங்களும் இணையதளம் வழியே அனுப்பினார். வேலைக்குச் செல்ல மறுத்த சுமித்ரா, தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததும் அடித்து துன்புறுத்த துவங்கினார். கருக்கலைப்பு செய்யாவிடில், விவாகரத்து செய்துவிடுவேன் எனவும் மிரட்டினார். மிரண்டு போன சுமித்ரா, கருக்கலைப்பு செய்து கொண்டார். கணவரின் தொல்லை தாங்காமல் அடுத்த சில நாட்களிலேயே கோவை வந்துவிட்டார். தன் நோக்கத்துக்கு உடன்படாததால் ஆத்திரமடைந்த சரவணகுமார், மனைவியுடன் போனில் பேசுவதை தவிர்த்தார்; தன் மொபைல் போன் எண்களையும் மாற்றிவிட்டார். கணவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் சுமித்ரா பரிவித்து வந்த நிலையில், எவ்வித தகவலும் தெரிவிக்காமல் கோவை வந்திறங்கினார் சரவணகுமார். அவருடன் சேர்ந்து வாழும் முயற்சியில் ஈடுபட்ட சுமித்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


அதிருப்தி அடைந்த அவர், போலீசில் முறையிடுவதாக எச்சரித்துள்ளார். போலீசார் கைது செய்துவிடுவார்களோ என உஷாரான சரவணகுமார், அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் இறங்கினார். இதுகுறித்து, கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்த சுமித்ரா, அமெரிக்காவுக்கு தப்பிச்செல்லும் முன் தன் கணவரை பிடிக்க வேண்டுமென்றும், அவர் வரதட்சணை துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்றும் தெரிவித்திருந்தார். ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சரவணகுமார், அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியை முறியடிக்கும் விதமாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, முக்கிய விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட் மற்றும் போட்டோ விவரங்கள் பரிமாறப்பட்டன. இந்நிலையில், கடந்த 21ம் தேதி அமெரிக்காவுக்கு செல்வதற்காக மும்பை விமான நிலையம் சென்ற சரவணகுமாரை, அங்குள்ள குடியுரிமைப்பிரிவு அதிகாரிகள், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்; காவலில் வைக்கப்பட்டார். இதுகுறித்த தகவல் கோவை மாநகர போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. சரவணகுமாரை கோவைக்கு அழைத்துவர, கமிஷனர் சைலேந்திரபாபு உத்தரவுப்படி, தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.


கோவை : மனைவியை தவிக்க விட்டு, அமெரிக்கா தப்பிச் செல்ல முயன்ற கணவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கோவை, ராமநாதபுரம், அய்யப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுமித்ரா(29); பட்டதாரி. 2006ல் இவருக்கும், திருச்சி, முசிறியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சரவணகுமாருக்கும் திருமணம் நடந்தது.


கோவை தனியார் வங்கியில் பணியாற்றி வந்த சுமித்ரா, கணவருடன் 2009ல் அமெரிக்கா சென்றார். கணவரின் சித்ரவதை, கட்டாய கருக்கலைப்பு மற்றும் மிரட்டலுக்கு பயந்து கோவை திரும்பினார். சமீபத்தில் கோவை வந்த சரவணகுமார், மனைவியுடன் முகம் கொடுத்து பேசாமல், மீண்டும் அமெரிக்கா செல்ல முயன்றார். கணவனின் பாராமுகம், தப்பும் முயற்சி பற்றி போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்பட்டது.


கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அனைத்து விமான நிலையங்களையும் உஷார்படுத்தினர். கடந்த 21ம் தேதி, மும்பை விமான நிலையத்தில் சரவணகுமார் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., பொன்னுத்தாய் குழுவினர் மும்பை சென்று, நேற்று முன்தினம் சரவணகுமாரை கோவை அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பின், நேற்று முன்தினம் ஜே.எம்.எண்: 6 கோர்ட்டில், மாஜிஸ்திரேட் ஜோதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்; 15 நாள் நீதிமன்ற காவலுக்காக, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


===========

புத்திசாலி மருமகளான இவர் தனக்கு அமெரிக்க நாட்டில் கணவன் கொடுமை செய்ததாகவும், கருக்கலைப்பு செய்யச் சொன்னதாகவும் இந்தியாவிற்கு வந்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். நீங்கள் இந்த செய்தியில் ஒன்றை முக்கியமாக கவனிக்கவேண்டும். இந்த மருமகள் M.B.A. என்ற உயர்கல்வி கற்றவர், வங்கியில் பணிபுரிந்தவர் என்று செய்தியில் உள்ளது. ஆனால் இவர் இந்தக் கொடுமைகளைப் பற்றி அமெரிக்க போலிஸில் உடனடியாக புகார் கூறவில்லை. அப்படிக் கூறியிருந்தால் உடனடியாக அந்த நாட்டு போலிஸ் கணவனை சிறையில் அடைத்திருப்பார்கள். அதுவும் கருக்கலைப்பு செய்யச்சொல்லி மனைவியை கொடுமை செய்தல் என்பது அமெரிக்க சட்டப்படி மிகவும் கொடுமையான குற்றமாகும்.

இங்குதான் எல்லா வெளிநாட்டு வாழ் மருமகள்களும் ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். அமெரிக்கநாட்டில் உங்கள் கணவர் மீது நீங்கள் புகார் கொடுத்தால் “நீங்கள் நினைப்பதை” அடைவது சற்றுக் கடினம். ஏனென்றால் அமெரிக்க போலிஸிற்கோ, நீதிமன்றத்திற்கோ இந்திய “மருமகள்களின் கண்ணீரின்” மதிப்பு தெரியாது.

ஆனால் அதுவே நீங்கள் இந்தியாவிற்கு வந்து போலிஸ் முன் சற்று கண்ணைக் கசக்கினால் போதும் கணவனையும் அவனது குடும்பத்தையும் எந்தக்கேள்வியுமின்றி கூண்டோடு கைது செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள்.

இந்தியாவில் மருமகளின் கண்களுக்கும், கண்ணீருக்கும் சமுதாயத்தில் அப்படி ஒரு மதிப்பிருக்கிறது. நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையென்றால் பின்வரும் செய்தியையும் பாருங்கள்.

==========

தலையங்கம்: யார் குற்றவாளி?
17 Jun 2010 தினமணி தலையங்கத்தின் ஒரு பகுதி

சுமார் 23,000 பேரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த சம்பவத்தில் அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் மெத்தனமாக இருந்தது என்பதும், குறைந்தபட்ச இழப்பீட்டைத்தான் அரசு பெற்றுத்தந்தது என்பதும்தான் இதுவரையிலும் விவாதமாக இருந்து வந்தது. ஆனால் இப்போதுதான் அம்பலமாகியிருக்கிறது, குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியும் பறித்த கதை.

வாரன் ஆன்டர்சனை போபாலிலிருந்து தனி விமானத்தில் தில்லிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குத் தப்பவிட்டனர் என்ற உண்மை இப்போது வெளியுலகுக்குத் தெரிந்த பிறகு, அதற்குக் காரணமே அப்போதைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங்தான் என்று கூசாமல் பழிகூறி பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது காங்கிரஸ்.


அர்ஜுன் சிங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி "சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுமே என்று அஞ்சியே வாரன் ஆன்டர்சன் அனுப்பி வைக்கப்பட்டதாக'வும் அர்ஜுன் சிங் அந்த நோக்கிலேயே செயல்பட்டதாகவும் கூறி அவரையும் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். இது இந்திய அரசின் நிர்வாக லட்சணம் எப்படி இருக்கிறது என்பதையே பறைசாற்றுகிறது.

==========


23,000 பேர் இறந்துபோக காரணமான போபால் விஷவாயு கசிவில் நேரடித்தொடர்புடைய ஆட்களை பாதுகாப்பாக விமானத்தில் ஏற்றி அமெரிக்காவிற்கு அனுப்பிய இதே நாட்டில் அமெரிக்காவில் நடந்ததாக சொல்லப்பட்ட கொடுமைக்காக இந்தியாவிற்கு வந்து கண்ணீர் சிந்திய ஒரே ஒரு மருமகளின் கண்ணீரைத்துடைப்பதற்காக விமானத்தில் ஏறவிருந்த கணவனை மும்பை வரை சென்று கைதுசெய்து கையோடு அழைத்துவந்து கோவை சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதிலிருந்து மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் 23,000 அப்பாவிகள் இறந்து அவர்களின் குடும்பங்கள் விடும் கண்ணீரைவிட ஒரே ஒரு இந்திய மருமகளின் கண்ணீருக்கு ஆற்றல் மிகவும் அதிகம்!

அதனால் மருமகள்கள் தங்களது கண்ணீரை இந்தியாவில் தக்க சமயத்தில் சிந்தினால் அதன் மூலம் தங்களது குறிக்கோளை எளிதாக அடையலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் உங்களுக்கு உதவினாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து அவற்றை பக்குவமாகப் பயன்படுத்தத் தெரிந்தால்தான் கணவனின் குடும்பத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். இதுதான் இந்திய மருமகளாக இருப்பதற்கான அடிப்படை ரகசியம்.

வாழ்த்துக்கள்!

மருமகள்களுக்கு உபயோகமான மற்றொரு பதிவு. இதையும் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படி





நீதிபதி மாமாவிற்கு பாடம் கற்பித்த மருமகள்

வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடைமுறையில் இருந்தாலும் அதை ஒழுங்காக செயல்படுத்தாத காரணத்தால் பல அப்பாவி மருமகள்கள் கணவனாலும் அவனது குடும்பத்தாலும் சொல்லமுடியாத கொடுமைகளுக்கு இன்றும் ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வரதட்சணை தடுப்பு அலுவலர் என்று ஒருவர் இருக்கிறார். அவருடைய மாவட்டத்தில் நடக்கும் திருமணங்களில் வரதட்சணை பரிவர்த்தனை, கொடுமை நடக்காமல் அவர் பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படி ஒரு அதிகாரி இருப்பது பல மருமகள்களுக்குத் தெரியவே தெரியாது. இது யாருடைய குற்றம்? இதைப்பற்றி மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாமல் ரகசியமாக வைத்திருப்பது யார்? அல்லது இந்தப் பணியை செய்யாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பது யார்? ஒருவேளை இது ஆணாதிக்க சதியாக இருக்கலாம்!

இருக்கின்ற வரதட்சணை தடுப்புச் சட்டத்தையே ஒழுங்காக செயல்படுத்தாமல் அதைனைத் தொடர்ந்து 1984ல் மீண்டும் IPC498A என்ற சட்டமும், 2005ல் குடும்பவன்முறை தடுப்புச் சட்டமும் இயற்றப்பட்டிருக்கிறது. இத்தனை சட்டங்கள் இருந்தாலும் மருமகள்கள் அனுபவிக்கும் இந்தக் கொடுமைகளுக்கு யார் காரணம்? கணவனும் அவனது குடும்பத்தாருமா? சட்டங்களை வெறும் ஏட்டளவிலேயே வைத்துக்கொண்டு அவற்றை முறைப்படி செயல்படுத்தாதமல் வைத்திருப்பது யார்? இதுவும் இது ஆணாதிக்க சதியாக இருக்கலாம்!

இதில் அதிகம் படித்த உயர் பதவியிலுள்ளவர்கள்தான் இந்த சட்டங்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தங்களது அதிகார ஆணவத்தில் மருமகள்களை கொடுமை செய்கின்றனர். இதுபோன்றவர்களை அந்த வீடுகளில் இருக்கும் மருமகள்கள் கொஞ்சமும் தயங்காமல் IPC498A, DP Act, DV Act போன்ற மருமகள் பாதுகாப்பு சட்டங்களைப் பயன்படுத்தி இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும். மேல்தட்டுவர்க்க மருமகள்களுக்கே இந்த அவலநிலை என்றால் சாதாரண நடுத்தர வர்க்க குடும்பங்களில் வாழும் மருமகள்களின் நிலையை எண்ணிப்பார்க்கவே முடியவில்லையே.

அதனால் நாட்டை சுத்தப்படுத்தும் முயற்சியில் இன்றே ஒவ்வொரு மருமகள்களும் களத்தில் இறங்கவேண்டும். மேல்தட்டு வர்க்க மக்களின் வீடுகளில் நான்கு சுவருக்குள் நடக்கும் கொடுமைகளை தயங்காமல் தட்டிக்கேளுங்கள். இந்திய அரசாங்கம் உங்கள் பக்கம் இருக்கிறது. இதுபோன்ற முயற்சிக்கு முன்னுதாரணமாக ஒரு மருமகள் களத்தில் இறங்கியிருக்கிறார். அவருக்கு இந்திய மருமகள்கள் சார்பாக வாழ்த்துக்கள்!


ஜனவரி 24,2011 தினமலர் செய்தி


ராஜ்கோட்:மருமகளை வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்திய, நீதிபதிக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


குஜராத் மாநிலம் அம்ரேலியைச் சேர்ந்த தர்ஷணா என்ற இளம்பெண்ணுக்கும், போர் பந்தர் மாவட்ட செசன்ஸ் கோர்ட் நீதிபதி அரவிந்த் தவேயின் மகன் கின்னார் என்பவருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், அம்ரேலி போலீஸ் ஸ்டேஷனில், தர்ஷணா தன்னை தனது கணவர், மாமனார் அரவிந்த் தவே, மாமியார் பிரதிபா, தனது கணவரின் தம்பி பிரசாந்த் ஆகியோர் 10 லட்சம் ரூபாய் கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், சில மாதங்களுக்கு முன்னர், தன்னை அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாகவும் போலீசாரிடம் புகார் அளித்தார்.மேலும், தனது கணவர் தன்னை விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டி வருவதாகவும், எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தர்ஷணா கேட்டுக் கொண்டார்.


இந்த புகாரின் மீது விசாரை மேற்கொண்ட போலீசார், புகாரில் உண்மை இருப்பதால், நீதிபதி அரவிந்த் தவே உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேல்தட்டுவர்க்க மருமகள்களே இன்றே விழித்தெழுங்கள். வீட்டிற்குள் உங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சமூக அந்தஸ்து என்ற பெயரில் மூடிமறைத்தது போதும். அதிகாரப் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் கயவர்கள் உங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை உடனே அரசாங்கம் கொடுத்திருக்கும் சட்டங்களைப் பயன்படுத்தி ஒடுக்குங்கள்.


நீங்கள் நடத்தப்போகும் பாடத்திற்கான பயிற்சியை இங்கே ஆரம்பியுங்கள்:


வாழ்த்துக்கள்!





மருமகளின் புத்தாண்டுப் பரிசு!

நான் விளக்கமாகச் சொல்வதை விட நீங்களே படித்து மகிழுங்கள். இதுதான் மருமகள்களுக்கு இந்தப் புத்தாண்டின் பரிசு.



A local court has rejected anticipatory bail application of Inspector General of Police Ajit Kumar Shrivastava and his wife in a dowry case filed by their daughter-in-law.

Additional District and Sessions court judge Shailendra Shukla rejected their application yesterday saying Shrivastava was a top police officer and at a time when investigations into the case were at a preliminary stage, a bail will not be appropriate.

According to prosecution, Shrivastava and his wife Manjulata sought anticipatory bail after a dowry case was registered against them by their daughter-in-law Namrata.

Namrata, who tied the knot with Shrivastava's son Abhishek on April 18, 2008, had lodged a complaint against him, his parents and her sister-in-law Apurva in the Mahila Police Station here last month for demanding a dowry of Rs 30 lakh and harassing her when their demand was not fulfilled.

After investigating her complaint, a case was registered against the Shrivastavas.


இந்த புத்தாண்டில் ஒவ்வொரு மருமகளும் தங்கள் கணவனின் குடும்பத்திற்கு இதுபோலஅதிர்ச்சியான புத்தாண்டு பரிசு கொடுத்து மகிழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்கள்!





இந்திய மருமகள்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி!

மருமகள்களே,

கொடுமைக்கார கணவன் மற்றும் மாமியாரின் வன்முறைகளிலிருந்து உங்களைக் காப்பாற்ற நமது தோழிகள் பல ஆண்டுகளாகப் போராடி வரதட்சணை தடுப்புச் சட்டம் (Dowry Prohibition Act), IPC498A (1983), Protection of Women Against Domestic Violence Act-2005 போன்ற பல அருமையான சட்டங்களை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். அவை நமக்கு எப்படியெல்லாம் இன்றும் உதவிக் கொண்டிருக்கின்றன என்று நமக்கு நன்றாகவே தெரியும். அவற்றைப் பற்றித் தெரியாமல் இருக்கும் அப்பாவி மருமகள்கள் பின்வரும் முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.


இந்த இந்திய சட்டங்கள் நமக்குப் பலவாறு உதவிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சமீபத்தில் அமெரிக்க அரசாங்கமும் நமக்கு நிதியுதவி செய்து மேலும் பல புதிய சட்டங்களை உருவாக்கித்தர மனமுவந்து முன்வந்திருக்கிறது. அந்த புதிய சட்டத்திற்குப் பெயர்தான்

The International Violence Against Women Act (IVAWA) - Shaping U.S. Polices That Help Women Lift Themselves.

இந்திய மருமகள்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடும் அமெரிக்க அரசின் இந்த உயர்ந்த கொள்கைக்கு உங்களது ஆதரவைத் தெரிவிக்க பின்வரும் இணைப்பில் சென்று உங்களது ஆதரவுக் கருத்துக்களை எழுதுங்கள்.


இப்படி அந்நிய நாடுகளே இந்திய மருமகள்களின் நலனில் அக்கறை கொண்டு நிதியுதவி அளித்து புதிய சட்டங்களை இயற்ற உதவிசெய்யும்போது நமதுநாட்டில் மருமகள்களுக்கெதிராக ஒரு புதிய சதித்திட்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் யாரோ ஒருவர் இந்திய ராஜ்ய சபாவிற்கு மனு கொடுத்து மருமகள்களின் தோழியான IPC498A சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அந்தக் கொடுமையை இங்கே Petitions with the Committee டவுண்லோடு செய்து படித்துக்கொள்ளுங்கள். இதற்குப் பல உள்நாடு மற்றும் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து ராஜ்ய சபா பரிசீலணைக் குழுவிற்கு கடிதங்கள் அனுப்பியிருக்கிறார்கள்.

இதை இப்படியே விட்டுவிட்டால் IPC498A சட்டத்தில் திருத்தம் செய்துவிடுவார்களேயானால் இந்திய மருமகள்களுக்கு குடும்பத்தில் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் போய்விடும். அதைப் பற்றி அனைத்திந்திய ஜனனாயக மாதர் சங்கம் தங்களது கவலையையும் எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறார்கள். அந்த செய்தியையும் படித்துக்கொள்ளுங்கள்.

Friday, Dec 24, 2010 The Hindu

NEW DELHI: The All India Democratic Women's Association (AIDWA) has opposed the proposed dilution of dowry-related Section 498-A of the Indian Penal Code on a petition filed before the Rajya Sabha by Anupama Singh.

In a memorandum to the Rajya Sabha Petitions Committee, the AIDWA has expressed shock and distress over the proposal demanding that offences under Section 498-A be made non-cognisable, bailable and compoundable. This Section recognises that acute domestic violence and dowry-related torture are a serious offence, and prescribes a jail punishment of up to three years, the AIDWA has pointed out.


Make ineffective


The attempt in the petition before the committee is to make Section 498-A totally ineffective so that no guilty husband or in-laws can be prosecuted under it. Section 498-A was incorporated in the IPC after a long, sustained struggle by women's organisations and others. However, dowry-related torture and domestic violence continued to escalate even after this Section and 304 (B) (dowry death) were incorporated in the law, the memorandum said.


Making 498-A non-cognisable would mean the police not responding to any complaint made under this Section by a woman in distress, and their not embarking on any investigation into cases, in which a woman suffered physical and mental violence as defined in Section 498-A or/and who was harassed or tortured for dowry. In effect, no case would be registered under this Section and women would have to go to court to file complaints before a magistrate. “Very few women in our country will have the means or ability to do so,” the memorandum pointed out.


“Our organisation has dealt with, and continues to deal with, several thousand complaints of dowry harassment, dowry death and domestic violence on a daily basis. It is our experience that women victims of violence do not file complaints under this Section unless they have suffered prolonged harassment and torture in their marital homes. Even then, we have found that the women who make complaints under Sec. 498-A have to face the brunt of gender bias, corruption and inefficiency in the criminal justice system. They have faced several obstacles to using the law. It would have been more relevant to consider strengthening of the dowry laws to ensure that women live a life free from violence.”



இந்த அதிர்ச்சியான செய்திக்கு நடுவே மற்றொரு அதிர்ச்சி மருமகள்களுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது. பின்வரும் புள்ளிவிவரத்தைப் பார்த்தீர்களா? மருமகள்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்துவருகின்றது. இந்த நிலை நீடித்தால் குடும்பத்தில் மருமகள்களின் ராஜ்ஜியத்தை அழித்துவிடுவார்களே.

12/26/2010
தினமலர்


தமிழகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், அவர்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


தமிழக காவல் துறை, பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. தமிழக குற்ற ஆவண காப்பக பதிவின்படி, பெண்களுக்கெதிரான குற்றங்கள், கடந்தாண்டை விட 23 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுவாக கற்பழிப்பு, மானபங்கம், கடத்தல், பாலியல் கொடுமை, வரதட்சணை கொடுமை, கணவன், உறவினர்களால் கொடுமைப்படுத்தப்படுதல் போன்ற குற்றங்கள் பெண்களுக்கெதிராக அதிகளவில் பதிவாகும். அந்த வகையில், 2008ல் 6,262 வழக்குகள் பதிவாயின. கடந்தாண்டு, 5,126ஆக குறைந்த நிலையில், நடப்பாண்டில் நவம்பர் வரை 5,508 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.


கற்பழிப்பு: கடந்தாண்டில் குறைந்தாலும், இந்தாண்டு மீண்டும் அதிகரித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டில், 626 கற்பழிப்பு புகார்கள் பதிவாகியுள்ளன. சேலம், நெல்லை, விழுப்புரம் மற்றும் சென்னையில் தான் அதிகளவில் கற்பழிப்புகள் நடந்துள்ளன. ஊட்டி மற்றும் கோவையில், தலா ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டது என, கற்பழிப்பு பட்டியல் நீள்கிறது. கற்பழிப்பு சதவீதம், கடந்தாண்டை விட இந்தாண்டு 12 சதவீதம் அதிகம்.


வரதட்சணை: வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், இந்தாண்டு 183 புகார்கள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாக, இந்தாண்டு 534 புகார்கள் பதிவாகியுள்ளன. இது கடந்தாண்டை விட 31 சதவீதம் குறைவு. இதில், அதிகபட்சமாக விருதுநகரில் 97, கன்னியாகுமரி 96, திருச்சியில் 87, சென்னை புறநகரில் 78 புகார்கள் பதிவாகியுள்ளன. இன்னும் டிசம்பர் மீதமிருக்கையில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் காக்கிச்சட்டை அதிகாரிகள்.


இதுபோன்ற ஆபத்தான காலகட்டத்தில் வாழும் மருமகள்களுக்கு இருக்கின்ற சட்டத்தையும் வலுவிழக்கச் செய்தால் பிறகு மருமகள்களால் இந்திய நாட்டில் வாழ முடியுமா? ஓநாய்கள் போல வட்டமிடும் கணவன் மற்றும் அவனது குடும்பத்தை மருமகள்களின் கட்டுப்பாட்டில் காலடியில் கிடக்கும் நாய் போல வைத்திருக்க மேலும் பல மருமகள் பாதுகாப்புச் சட்டங்கள்தான் தேவையே தவிர இருக்கின்ற சட்டங்களை திருத்தக் கூடாது. அதனால் நீங்கள் இன்றே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு உங்களது ஆதரவை அளித்து IPC498A சட்டதிருத்தத்திற்கு உங்களது எதிர்ப்பை தெரிவியுங்கள்.

மருமகள்கள் இந்த சட்டத் திருத்தத்தைப் பற்றி அக்கறையில்லாமல் தங்களது எதிர்ப்பை தெரிவிக்காமல் விட்டுவிட்டால் பிறகு இந்திய மருமகள்களின் பாதுகாப்பிற்காக புதிய சட்டத்தை இயற்றுவதற்கு அமெரிக்க அரசு கொடுக்கப்போகும் நிதியுதவி கிடைக்காமல் போய்விடும்.

இருக்கின்ற IPC498A சட்டத்தையே விட்டுவிட்டீர்களே பிறகு எப்படி புதிய சட்டத்திற்கு நிதியுதவி கொடுப்பது என்று வெளிநாட்டுக் கொடைவள்ளல்கள் நிதிகொடுக்கத் தயங்குவார்கள் அல்லவா? மருமகள்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையே இல்லாமல் போய்விடுமே. தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த நிதியுதவி நின்று போனால் பிறகு இந்திய மருமகள்களின் வாழ்க்கையே இருண்டுபோய்விடுமே. கணவனையும் அவனது குடும்பத்தையும் நம்பி எத்தனை ஆண்டுகள் வாழமுடியும்? மருமகள்கள் என்ன கணவன் வீட்டு அடிமைகளா? இதற்குமேல் என்னால் சொல்லமுடியாது.

அதனால் அனைத்து தன்னார்வ மருமகள் நல சங்கங்களுக்கும் உங்களது ஆதரவை தெரிவித்து மருமகள்களின் உரிமையைப் பாதுகாக்க தடையில்லா நிதியுதவி கிடைக்க உங்களது மேலான ஆதரவை நல்கி உங்களது எதிர்காலத்தில் சுதந்திரமான பெண்ணாக வாழுங்கள்.

ஆகவே IPC498A சட்டத்திருத்தத்திற்கு உங்களது குடும்பத்தோடு சேர்ந்து எதிர்ப்பினை தெரிவித்து இந்திய ராஜ்ய சபாவிற்கு கடிதம் அனுப்புங்கள். அதே சமயம் அமெரிக்க அரசின் நிதியுதவியில் உருவாகி இந்தியாவிற்கு வரப்போகும் புதிய சட்டமான The International Violence Against Women Act (IVAWA) - சட்டத்திற்கு உங்களது முழு ஆதரவினை தெரிவியுங்கள்.

மருமகள்களின் ஏகோபித்த ஆதரவுடன் இருகரம் கூப்பி இந்த புதிய சட்டத்தை இந்தியாவிற்குள் வரவேற்று கணவன்களையும், அவர்களது குடும்பங்களையும் அடக்கி மருமகள்களின் வெற்றிக்கொடியை நாடெங்கும் பட்டொளி வீசி பறக்கவிடுவோம் என்று சபதம் எடுத்துக்கொள்ளுங்கள்.

இன்றே நீங்கள் இதைச் செய்தால்தான் ஒவ்வொரு குடும்பத்திலும் மருமகள்கள் தங்களது கணவனின் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் தங்களின் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு உங்களது தோழிகளுக்கும் இந்த விழிப்புணர்வுச் செய்தியை தவறாமல் அனுப்பிவையுங்கள்.

வாழ்த்துக்கள்!




சென்னையில் ஆண்கள் செய்த அட்டகாசம்

சென்ற வாரம் ஏதோ ஆண்கள் தினம் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அருகே சென்று பார்த்தபோது ஏதோ நோட்டிஸ் கொடுத்தார்கள். அதில் ஆண்களுக்கு என்று தனியாக ஒரு அமைச்சகம் மற்றும் தேசிய அளவில் ஆண்கள் நல வாரியம் மற்றும் மாநில அளவில் ஆண்கள் நல வாரியம் வேண்டும் என்று கோரிக்கை எழுதப்பட்டிருந்தது.

தற்போது மருமகள்களுக்கு மட்டுமே தனியாக அமைச்சகம் மற்றும் வாரியங்கள் இருக்கின்றன. இது தவிர NGO என்று சொல்லப்படும் அரசு நிதியுதவி பெறும் பல அமைப்புகள் நாடு முழுதும் மருமகள்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஆண்கள் தங்களுக்கும் மருமகள்களுக்கு இருப்பதுபோல தனியாக அமைச்சகம் வேண்டும் என்று கேட்பது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கை.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மருமகள்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று வினோதமான கோரிக்கைகளும் காதில் விழுந்தது. அதைக்கேட்டபோது மிகவும் சிரிப்பாக இருந்தது. இவர்கள் போடும் கூப்பாடுகளை யாரும் காதில் வாங்கமாட்டார்கள் என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதைப்பற்றி கீழுள்ள வீடியோவில் கூட இரண்டு பொதுமக்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

அதனால் மருமகள்கள் கொஞ்சமும் தயங்காமல் வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தி இதுபோன்று கூச்சலிடும் ஆண்களை கட்டுப்படுத்தினால்தான் வருங்காலத்திலும் இந்திய மருமகள்கள் தங்கள் குடும்பங்களிலும், நாட்டிலும் செல்வாக்குடன் வாழமுடியும்.

உங்களுக்காக அந்த வீடியோவையும் கீழே கொடுத்திருக்கிறேன். பார்த்து தெளிவாக சிந்தித்து வரதட்சணை சட்டங்கள் மூலம் இவர்களை எப்படி அடக்கலாம் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!









இந்திய மருமகள்களின் கரங்களை வலுப்படுத்துவோம் வாருங்கள்!

சமீப காலமாக பல அமைப்புகள் மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வலைத்தளத்திலும் பலர் தங்களது எதிர்ப்புக் கருத்துக்களை எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு சவால் விடும் விதமாக மருமகள் பாதுகாப்பு சங்கத் தலைவி ஒரு கருத்து தெரிவித்திருக்கிறார்.

இவ்வளவு சட்டங்கள் இருக்கும்போதே பல மருமகள்கள் கணவனாலும், அவனது குடும்பத்தாலும் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் அந்தத் தலைவி. அதனால் மருமகள்கள் தங்களது வெற்றிக்கொடியை மாமியார் வீட்டில் நிலைநாட்டி தங்களது அதிகாரத்தின் கீழ் கணவனையும் அவனது குடும்பத்தையும் கொண்டுவந்தால்தான் இதற்கு ஒரு விடிவுகாலம் வரும் என்று நான் கருதுகிறேன்.

அதனால் மருமகள்கள் அனைவரும் ஒன்று திரண்டு மருமகள் பாதுகாப்பு சட்டங்களையும், மருமகள் பாதுகாப்பு சங்கங்களையும் ஆதரித்து இந்திய மருமகள்களின் கரங்களை வலுப்படுத்துவோம் என்று சபதம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


வரதட்சணை தடுப்பு சட்டத்தை நீக்கினால் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கும்

தினமலர் நவம்பர் 11,2010

மதுரை : "" வரதட்சணை தடுப்பு சட்டத்தைநீக்கினால், பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கும்,'' என, மதுரை ஏக்தா அமை ஒபின் ஆய்வாளர் பவளம்
தெரிவித்தார்.


மதுரை ஏக்தா பெண்கள் ஆதார அமைப்பின் 20வது ஆண்டுவிழா நடந்தது. ஏக்தா இயக்குனர் பிம்லா, முன்னாள் தலைவி ரோகிணிதேவி, உறுப்பினர்கள் ஜேசுரத்தினம், தேவமனோகரன், காந்திமதி பங்கேற்றனர். மதுரை காமராஜ் பல்கலை இதழியல் துறைத் தலைவி சாந்தா துவக்கி வைத்தார். பெண் கொடுமையை சித்தரிக்கும் போஸ்டர்களை, மதுரை லேடிடோக் கல்லூரி முதல்வர் மெர்ஸி புஷ்பலதா வெளியிட்டார்.

இ.பி.கோ., 498 சட்டம் குறித்த மலரை வெளியிட்டு, பவளம் பேசியதாவது :
கடந்த 1961 ல் வரதட்சணை தடுப்பு சட்டம் கொண்டுவரப் பட்டது. ஆனால் 1970 க்கு பிறகு, வரதட்சணை சாவுகள் அதிகமானது. எனவே 1983 ல், இ.பி.கோ., 498 (ஏ) சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆரம்பம்முதலே சமுதாயத்தில் எதிர்ப்பு இருந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன், அவரது குடும்பத்தினர் மூலம் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டால், இச்சட்டத்தின் உதவியை நாடலாம். ஆனால் இச்சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கணவரை மிரட்டி பணம் பறிப்பதற்கும், குடும்ப உறுப்பினர்களை மிரட்டுவதற்கும் இச்சட்டத்தை பெண்கள் பயன்படுத்துவதால், இதை நீக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றனர். ஆண், பெண் பாகுபாடில்லாமல், பொதுவான சட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் 1999 முதல் 2008 வரை, மொத்தம் 2091 வரதட்சணை சாவுகள் நிகழ்ந்துள்ளன. வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2146 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கணவன் மற்றும் கணவன் வீட்டாரால் கொடுமைப்படுத்தப்பட்டதாக (இ.பி.கோ.,498) 12 ஆயிரத்து 752 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இச்சட்டத்தை நீக்கினால், பெண்களுக்கு எதிரான வன்முறைகள்இன்னும் அதிகரிக்கும், என்றார்.


மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் என்பவை கைகேயிக்கு கொடுக்கப்பட்ட வரங்கள் போன்றவை அவற்றை எங்கு எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று மருமகள் மட்டுமே முடிவு செய்யமுடியும் (அதைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த பதிவினைப் படியுங்கள்: வரதட்சணை சட்டங்கள் மூலம் மனைவி கணவனை மிரட்டினால் தவறில்லை). மற்றவர்கள் இதில் எந்தக் குறையும் சொல்ல உரிமையற்றவர்களாவார்கள். அதனால் தற்போது இருக்கின்ற மருமகள் பாதுகாப்புச் சட்டங்களைப் போற்றிப் பாதுகாப்போம்! புதிய சட்டங்களை வரவேற்போம்!!

வாழ்த்துக்கள்!


மருமகள்களுக்கு இந்திய அரசின் தீபாவளி இனிப்பு

இந்திய அரசின் மருமகள் பாதுகாப்பு (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act) சட்டங்கள் மூலம் வீட்டில் முடிசூடா அரசியாக வலம் வந்த மருமகள்கள் இனி நாட்டில் எல்லா இடங்களிலும் தங்களது ஆட்சியை நிலைநாட்டி நாட்டிற்கு பெருமை சேர்க்க இந்திய அரசாங்கம் இந்த தீபாவளி நன்னாளில் மருமகள்களுக்கு இனிப்பான செய்தியைத் தந்திருக்கிறது.



டெல்லி: பணிபுரியும் இடங்களில் செக்ஸ் தொல்லைகளில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. அதில் செக்ஸ் தொல்லையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் `பணி இடங்களில் பெண்களுக்கு எதிரான செக்ஸ் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம்-2010' என்ற சட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பணி இடங்களில் `செக்ஸ் தொல்லை' என்பதற்கு உச்ச நீதிமன்றம் சில வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி உடலை தொடுதல், செக்ஸ் காரணத்துக்காக மிரட்டுதல் அல்லது வேண்டுகோள் விடுத்தல், உடல் மற்றும் வார்த்தை ரீதியாக விரும்பத்தகாத செயல்கள், வார்த்தைகளால் அல்லாத செக்ஸ் தொடர்பு போன்றவை செக்ஸ் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இது தவிர, பெண்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு அளிப்பதாக உறுதிமொழி அளித்தோ அல்லது அச்சுறுத்தியோ செக்ஸ் தொல்லை கொடுப்பது மற்றும் செக்ஸ் தேவைக்காக பணியிடத்தில் விரும்பத்தகாத சூழ்நிலையை உருவாக்குவது போன்றவையும் செக்ஸ் தொல்லைகளாக கருதப்படும்.

அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் அமைப்புசார நிறுவனங்களில் இத்தகைய தொல்லைகளை எதிர் கொள்ளும் பெண்களுக்கு இந்த சட்டத்தின் மூலமாக பாதுகாப்பு கிடைக்கும்.

பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாமல் ஒரு நிறுவனத்துக்கு வாடிக்கையாளராகவோ, தொழில்ரீதியாகவோ, தினக் கூலி தொழிலாளராகவோ செல்லும் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை தரப்பட்டாலும் இந்த சட்டப்படி தண்டனை தர முடியும்.

மேலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மாணவிகள், மருத்துவமனைகளில் பெண் நோயாளிகள் ஆகியோரும் இந்த சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற முடியும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிப்பதற்காக, நிறுவனங்களிலேயே புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என இந்த சட்டம் வலியுறுத்துகிறது.
10 பேருக்கு மேல் வேலை செய்யும் அனைத்து நிறுவனங்களிலுமே இத்தகைய கமிட்டி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். இது தவிர மாவட்ட கலெக்டர்களால் `புகார் கமிட்டியும்' அமைக்கப்படும். அதிலும் பெண்கள் புகார் தரலாம்.

பாதிக்கப்பட்ட பெண் அளிக்கும் புகாரை முழுமையாக விசாரித்து தண்டனை அளிப்பதற்காக இந்த கமிட்டிகளுக்கு 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இந்த சட்ட விதிகளை முறையாக செயல்படுத்தாத நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.


பணி இடங்களில் செக்ஸ் தொல்லையை தடுக்கும் விதமாக இயற்றப்பட்டிருக்கும் இந்த சட்டம் பல பெண்களுக்கு தங்களின் அதிகாரத்தையும், உரிமையையும் மாமியார் வீட்டில் மட்டுமல்லாமல் பணிபுரியும் இடங்களிலும் நிலைநாட்டிக்கொள்ளப் பயன்படும் ஒரு அற்புத ஆயுதமாகப் பயன்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மருமகள்களுக்கு ஒரு டிப்ஸ்: இந்த சட்டத்தின் மூலம் பணிபுரியும் இடத்தில் ஒரு ஆண் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக ஒரு பெண் புகார் கூற முடியும். ஆனால் ஒரு பெண் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக எந்த ஆணும் எந்த இடத்திலும் புகார் கொடுக்க வழி கிடையாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! :) அப்படிச் சொன்னாலும் அந்த ஆணை யாரும் நம்பமாட்டார்கள் என்பது ஒரு “+”.

மருமகள்களே உங்களது தோழிகளுக்கு இந்த சட்டத்தைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி இவற்றை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லிக்கொடுங்கள்.

மறக்காமல் இந்திய அமைச்சரவைக்கு உங்களது நன்றியை தெரிவித்துவிடுங்கள்.

வாழ்த்துக்கள்!


இந்திய சமூகம் ஆபத்தானது: மருமகள்களே உஷார்!

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இந்திய சமூகமே சீரழிந்துகொண்டிருக்கிறது. மருமகள்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதனால் மருமகள்களே இந்திய வரதட்சணை தடுப்புச்சட்டங்களை (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act) நீங்கள் கையில் எடுத்தால்தான் கணவனையும் அவனது குடும்பத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

உங்களுக்குக் கொடுமை ஏற்படும் வரை காத்துக்கொண்டிருக்காமல் உடனடியாக சட்டங்களை எப்படிப் பயன்படுத்தி கணவனின் குடும்பத்தை எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்று பின்வரும் முந்தைய பதிவுகளில் தெரிந்துகொள்ளுங்கள்.

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4


இந்தியாவில் மருமகளாக இருப்பதில் இருக்கும் ஆபத்துக்களைப்பற்றி இந்திய உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது. அதனால் நீங்கள்தான் உங்களை புத்திசாலித்தனமாக காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.


அக்டோபர் 31,2010 தினமலர்

புதுடில்லி : ""இந்திய சமூகம் நோய்வாய்ப்பட்டிருக்கிறது,'' என, சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.

சத்யநாராயணா திவாரி என்பவர் தனது மனைவி கீதாவை, அவரின் தந்தையிடமிருந்து மாருதி காரை வரதட்சணையாக வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தினார். 2000ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, கீதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். இதற்கு திவாரியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். இவர்களுக்கு அலகாபாத் ஐகோர்ட் ஆயுள் தண்டனை வழங்கியது. இதையடுத்து, இருவரும் சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை, நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: இந்திய சமூகம் தற்போது, நோய்வாய்ப்பட்ட சமூகமாக மாறி வருகிறது. இதற்கு ஆதாரமாக, சுப்ரீம் கோர்ட் உட்பட, நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும், அதிக எண்ணிக்கையில் இத்தகைய வரதட்சணைக் கொலை வழக்குகள் வரத்தொடங்கியுள்ளன. புதிதாக திருமணம் செய்து கொண்டு, ஆயிரம் கனவுகளோடு புகுந்த வீடு போகும் இளம்பெண்கள், தனது கணவனாலும், மாமனார் மற்றும் மாமியாரால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

மேலும், மண்ணெண்ணெய் ஊற்றி, உயிருடன் எரிக்கப்படுகின்றனர் அல்லது, வலுக்கட்டாயமாக தற்கொலை செய்து கொள்ள தூண்டப்படுகின்றனர். இந்த நாகரிக சமூதாயத்தில், பெண்கள் பயங்கரமாகவும், காட்டு மிராண்டித்தனமாகவுமே கையாளப்படுகின்றனர். பொதுவாக, இத்தகைய கொடூரச் செயலுக்கு, அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஆனால், அரிதிலும், அரிதாகவே, வரதட்சணைக் கொலை வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். அத்துடன் திவாரிக்கும் அவரின் தாயாருக்கும் அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.


திருமணம் செய்து கனவுகளுடன் மாமியார் வீட்டிற்குள் புகுந்தால் மட்டும் போதாது மருமகள்களே. அந்தக் கனவுகளை நனவாக்கிக்கொள்ள இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் மருமகள் பாதுகாப்பு சட்டங்களை எப்படிப் பக்குவமாக பயன்படுத்தவேண்டும் என்ற கலையையும் நீங்கள் கற்றிருக்கவேண்டும். வேறு எந்த வேலை தெரிகிறதோ இல்லையோ கண்டிப்பாக ஒவ்வொரு இந்திய மருமகளும் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற சட்டங்களை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று கற்றறிந்து வைத்திருக்கவேண்டும். இதுதான் உங்கள் திருமணக் கனவுகளை நனவாக்கிக்கொள்ள பயன்படும் மந்திரம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!




வரதட்சணை சட்டங்கள் மூலம் மனைவி கணவனை மிரட்டினால் தவறில்லை

இந்திய மருமகள்களுக்கு வழிகாட்டும் இந்த நல்ல பதிவுகளுக்கு வந்துள்ள கருத்துக்களில் பலர் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி.

பலர் இந்த பதிவுகளை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். அவர்களை திருப்திபடுத்துவதற்காக இந்த சிறப்புப் பதிவு.

கடுமையான விமர்சனங்களில் சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன். அதனைத்தொடர்ந்து அவர்களை சாந்தப்படுத்தும் வகையில் சில கருத்துக்களையும் கொடுத்திருக்கிறேன். படித்து மகிழுங்கள்.

==================================================

Anonymous said...

என்ன அருமையான வலைப் பதிவுகள். குடும்பத்ததை சீரழித்து மேற்கத்தியக் கலாச்சார வழியில் இந்தியக் குடும்ப அமைப்பை வழிநடத்த இதைவிட சிறந்த ஒரு வலைப்பதிவு இருக்க முடியுமா?

வயது போன காலத்தில் நாய் படும்பாடு படப்போகும் உங்களை மாதிரியான புத்திசாலியான மருமகள்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Wednesday, October 27, 2010 6:20:00 AM PDT

=======================

Anonymous said...

wht abt your family?Are you living with your DOG? I Mean your Husband?

Saturday, June 12, 2010 5:30:00 PM PDT

=======================

மிகவும் தவறான வழிகாட்டி பதிவு. தவறிழைக்கும் மருமகளை வழிகாட்டும் என்றும் நல்ல மருமகளுக்கு நல்லதொரு பாதுகாப்பு நல்கிடும் என்றும் 'மருமகளிடம்' எதிர்பார்த்தேன்.

குடும்பத்தினை சிதைக்கும் கோடரிக் காம்பு பதிவு என்று உணர்கிறேன். கருத்தினை சற்று ஆணித்தரமாக சொல்வதற்காக வருந்துகிறேன் ஆனால் உண்மை அது தான். நாட்டின் நலன் மற்றும் இறையாண்மை கருதி உங்கள் கருத்துகளை சீர்திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, July 14, 2010 12:55:00 PM PDT

======================
Anonymous said...

தூ....இதெல்லாம் ஒரு பொழப்பு....

Wednesday, December 30, 2009 1:24:00 PM PST

=======================

மேலே கருத்து சொல்லியிருக்கும் அனைவரும் இந்தப் பதிவுகள் ஏதோ மருமகள்களுக்கு தவறான வழிகாட்டுவதாக சொல்லியிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது.

திருமணமாகி கணவனின் குடும்பத்திற்கு செல்லும் மருமகள்கள் எப்படி தங்களது ஆட்சியை மாமியார் குடும்பத்தில் நிலைநாட்டுவது என்பதைத்தான் இந்தப் பதிவுகள் சொல்கின்றன. மருமகள்கள் தங்களது கைமேலோங்கி இருக்கச்செய்தால் அவர்களை யாரும் வரதட்சணைக் கொடுமை செய்யமுடியாதல்லவா?

அதற்காகத்தானே பல மருமகள் பாதுகாப்பு சட்டங்களை அரசாங்கமே கொடுத்திருக்கிறது. இவற்றை எப்படி பக்குவமாக மருமகள்கள் செயல்படுத்தலாம் என்று சொல்லிக்கொடுத்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காகத்தானே தேசிய பெண்கள் வாரியம், மாநில பெண்கள் வாரியம், பெண்கள் அமைச்சகம், பெண்ணுரிமை சங்கங்கள், பெண்ணுரிமை பேசும் வழக்கறிஞர்கள், மருமகள் கொடுக்கும் எல்லா வரதட்சணை வழக்குகளையும் பதிவு செய்யும் காவல்துறை நண்பர்கள் என்று ஒரு பெரிய மருமகள் ஆதரவுக் கூட்டமே நாட்டில் இருக்கிறது. மருமகளின் நலனுக்காக மட்டுமே செயல்படும் இந்த நுண்ணிய வலைப்பின்னலுடன் கூடிய அரசாங்க அமைப்பை முதலில் நன்கு புரிந்துகொண்டால் உங்களுக்கு இந்த தவறான எண்ணங்கள் தோன்றாது.

இன்னும் சொல்லப்போனால் இந்திய இதிகாசமான இராமாயணத்தில் கூட கணவனை வழிக்குக் கொண்டுவர மனைவி கணவனை எப்படி மிரட்டியிருக்கிறார் என்று பக்குவமாக சொல்லியிருக்கிறார்கள். இந்திய இதிகாசங்களை மதிப்பவர்கள் மருமகள்கள் சட்டங்களை எப்படிப் பயன்படுத்தினாலும் தவறாக நினைக்கமாட்டார்கள்.

இராமாயணத்தில் வரும் இந்த இரண்டு பாடல்களைப் படித்து பொருளை உணர்ந்துகொண்டால் மருமகள்கள் கணவனை தன்வழிக்குக்கொண்டுவர சட்டங்களை தங்கள் வசதிப்படி பயன்படுத்தலாம் என்பது தெளிவாகும்.


3. கைகேயி சூழ்ச்சிப் படலம்

கைகேயின் தீஞ்சொற்கள்

'திசைத்ததும் இல்லை; எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள்,
குசைப் பரியோய்! தரின், இன்று கொள்வேன்; அன்றேல்,
வசைத் திறன் நின் வயின் நிற்க, மாள்வென்' என்றாள். 23


தசரதன் தனக்குக்கொடுத்த வரத்தை இப்போது செயல்படுத்தி ராமனை காட்டிற்கு அனுப்பாவிட்டால் சொல்லிய வார்த்தையை காப்பாற்றாத மன்னன் இவன் என்று சொல்லி தற்கொலை செய்துகொண்டு அதற்குக் காரணம் என்னுடைய கணவன் தசரதன்தான் என்று எழுதிவைத்து ஊரறிய உன் மானத்தை வாங்கிவிடுவேன் என்று தசரதனின் மனைவி கைகேயி தனது கணவனை மிரட்டியிருக்கிறார் என்று இந்த பாடல் வரிகள் சொல்கின்றன.

அதனால் இந்தக்காலத்து மருமகள்கள் தங்கள் கணவனை தங்கள் வழிக்குக் கொண்டுவர வரதட்சணை தடுப்புச் சட்டங்களை பயன்படுத்துவது என்பது ஒன்றும் ஏதோ புதியதொரு செயலாகக் கருத இயலாது.


தயரதன் கைகேயின் காலில் விழுந்து இரத்தல்

'கோல் மேல் கொண்டும் குற்றம் அகற்றக் குறிக்கொண்டார்
போல், மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை மன்னா,
கால்மேல் வீழ்ந்தான், கந்து கொல்யானைக் கழல் மன்னர்
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான். 29


கைகேயி அப்படி மிரட்டியவுடன் தசரதன் அவளின் காலில் வீழ்ந்து கதறி அவளின் கட்டளைக்கு அடிபணிந்திருக்கிறான். மாமன்னன் தசரதனே மனைவியின் மிரட்டலுக்கு அடிபணிந்து காலில் விழுந்திருக்கிறான் என்றால் இந்தக்காலத்துக் கணவன்கள் எம்மாத்திரம். அதனால் மருமகள்கள் IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற அரசாங்கம் கொடுத்திருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி கணவனையும் அவனது குடும்பத்தையும் தங்கள் வழிக்குகொண்டுவருவது என்பது இந்திய இதிகாச மரபினை அடிப்படையாகக்கொண்டு நடக்கின்ற ஒரு மரபாகும். இதனை குறையென்று சொல்லலாமா?

இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில்கூட டில்லி உயர்நீதிமன்றம் திருமணத்தின்போது பெண் வரதட்சணை கொடுப்பது தவறு கிடையாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் 3வது பிரிவுப்படி வரதட்சணைக் கொடுப்பது குற்றமாக இருந்தாலும் அதை ஒரு பெண் செய்யும்போது அது குற்றமாகாது. அதே சமயம் கணவன் என்னை மிரட்டி வரதட்சணை வாங்கினான் என்று சொன்னால் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு கணவனை மட்டுமே வரதட்சணை சட்டத்தின் 3வது மற்றும் 4வது பிரிவுப்படி தண்டிக்கும். அதனால் மருமகள்கள் சட்டங்களை தேவைக்கேற்றபடி தயங்காமல் பயன்படுத்தலாம்.

அந்த செய்தியினையும் படித்து குறிப்பெடுத்துக்கொண்டு தக்க சமயத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.



New Delhi: Giving dowry for fear that a proposed marriage may otherwise be called off is not an offence, the Delhi High Court has held while quashing an FIR against a bride and her family for conceding the demands of the groom's family.


Justice Ajit Bharihoke quashed the criminal proceedings after the bride and her family convinced the court that dowry was given under pressure. For, the bridegroom's family had threatened to cancel the marriage.


“As per the allegations in the complaint made by the petitioner [bride], the demand for dowry was made by the father of the respondent [bridegroom] at the time of engagement ceremony when he allegedly asked her father to concede his demand for dowry, failing which he would call off the marriage.


“From the aforesaid facts, it is obvious that the petitioner and her parents were confronted with the unenviable situation of either conceding the demand or facing loss of honour of their family in society, and if under that fear, the petitioner and her parents conceded the demand for dowry, they cannot be faulted as they were victims of the circumstances,” the court said.


Granting the bride relief, the court said, “She cannot be subjected to prosecution for the offence under the Dowry Prohibition Act.”


The court passed the order on the petition filed by Pooja Saxena challenging a lower court's order which directed the police to register an FIR against her and her family members, who alleged dowry harassment by her husband and in-laws. Sameer Saxena and his family members were accused of committing cruelty to Pooja by harassing her for dowry. The woman, in an FIR with the Roop Nagar police station, claimed that her family members had given huge dowry to Mr. Saxena at the time of their marriage.


Mr. Saxena later pleaded before the lower court that criminal proceedings be initiated against his wife and her family as she herself had admitted to giving huge dowry, which was an offence under the statute. The lower court on March 10 passed an order directing registration of the FIR on a petition filed by Mr. Saxena. — PTI


இந்த தீர்ப்பின் அடிப்படையில் வரதட்சணை தடுப்புச் சட்டத்தை எப்படி பக்குவமாகப் பயன்படுத்தலாம் என்று அடுத்தபதிவில் எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள்!


வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படி

பல மருமகள்கள் பலவித கனவுகளோடு ஒரு “கணக்குப்போட்டு” தங்களது ஏக்கக் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நினைத்துவெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளையாகத் தேர்வு செய்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏக்கக் கனவுகளோடு வெளிநாட்டிற்கு வாழப்போகும் பெண்ணிற்கு ஏற்படும் ஏமாற்றம்தான் உலகத்திலேயே மிகப் பெரிய பாவம் . அதற்குப் பிராயச்சித்தம்தான் இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் வரதட்சணை சட்டங்கள். இதுபோன்ற மருமகள்களின் ஏக்கக்கனவுகள் ஏமாற்றமடைவதற்குக் காரணமான கணவன் மீது இந்தியாவில் வந்து வரதட்சணை வழக்குப் போடுவது தவறு கிடையாது.

அப்படி வழக்குப் போடும்போது “குடும்பம்” என்ற இந்திய மரபுப்படி இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்பத்தார் அனைவரையும் சேர்த்து புகாரில் எழுதிவிட்டால் போலிஸ் உடனடியாக மாமியார் குடும்பத்தாரை எந்தக்கேள்வியும் கேட்காமல் பிடித்து சிறையில் தள்ளிவிடுவார்கள் என்ற உண்மை பல மருமகள்களுக்கும் தெரியும். அப்படித் தெரியாத மருமகள்கள் முந்தைய பதிவுகளை படித்து தெரிந்துகொள்ளுங்கள். இது வழக்கமாக நடக்கும் வரதட்சணை வழக்கு நடைமுறை. ஆனால் வெளிநாட்டில் இருக்கும் கணவனை எப்படி அரசாங்க உதவியுடன் தன்வழிக்குக் கொண்டுவருவது என்று பல மருமகள்களுக்குத் தெரியாது. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மருமகள் வரதட்சணைப் புகார் கொடுத்தவுடன் இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்பத்தை உள்நாட்டு போலிஸ் “கவனித்துக்கொள்ளும்”. வெளிநாட்டில் இருக்கும் கணவனை “கவனிக்க” சர்வதேச போலிஸ் (InterPol) மருமகள்களுக்கு உதவி செய்கிறது. காவல்துறை எங்கிருந்தாலும் அது மருமகள்களுக்கு அரவணைப்பாகத்தான் செயல்படும். இது உலக நியதி. இப்படி சர்வதேச போலிஸின் உதவியுடன் உங்கள் கணவனை வழிக்குகொண்டுவர நம் நாட்டு சி.பி.ஐ. மருமகள்களுக்கு உதவி செய்ய வழி மேல் விழிவைத்துக் காத்துக்கிடக்கிறது.

ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட போபால் விஷவாயு வழக்கில் தொடர்புடையவர், இந்திய மக்களின் பலகோடி ரூபாயில் நடைபெற்ற பீரங்கி ஊழல் வழக்கில் தொடர்புடையவர் போன்றவர்களை தப்பவிட்டாலும் இந்தியமருமகள்களின் மாப்பிள்ளைகளை தப்பவிடமாட்டார்கள் நம்ம ஊர் அதிகாரிகள். மருமகள் மீது அவ்வளவு பாசமுடையவர்கள் நம்ம ஊர் அதிகாரிகளும், தலைவர்களும். இவர்களின் பாசத்தை மருமகள்கள் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு வெளிநாட்டில் இருக்கும் கணவனை சட்டையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்துவிடலாம்.



NEW DELHI: CBI on Saturday filed an application before a Delhi court seeking closure of the Bofors pay off case against Italian businessman Ottavio Quattrocchi.

In the plea filed before Chief Metropolitan Magistrate Kaveri Baweja, the probe agency said all efforts to extradite Quattrocchi for facing the trial here has failed.



Prime Minister Manmohan Singh said that the Ottavio Quattrocchi case was proving to be an embarrassment for the government and that it was “not a good reflection on the Indian legal system that we harass people while the world says we have no case.”

Speaking for the first time on the issue after The Indian Express reported last week that the CBI got the Interpol to withdraw the Red-Corner Notice on Quattrocchi, Singh told CNN-IBN on Saturday: “The Quattrocchi case is an embarrassment for the Government of India... we have tried to extradite him from Malaysia, from Argentina... and the courts have said we don’t have a strong case. Now it is not a good reflection on the Indian legal system that we harass people while the world says we have no case.”


The PM added that the Interpol asked India “why do you want to keep him under the Red-Corner Notice?” “The law minister referred (the issue) to the AG who gave the advice that it should be lifted,” he said.



வெளிநாட்டில் இருக்கும் கணவனை சர்வதேச குற்றவாளி என்று பிரகடனம் செய்ய மருமகள்கள் செய்யவேண்டியது ஒரே ஒரு விஷயம்தான். உங்களுக்கு உதவியாக செயல்படும் காவல்துறை நண்பர்களை கொஞ்சம் “கவனித்தால்” போதும் உடனடியாக அவர்கள் சி.பி.ஐ. அமைப்பை தொடர்புகொண்டு வேண்டிய காரியங்களை செய்வார்கள். பிறகு சி.பி.ஐ. சர்வதேச போலிஸை தொடர்பு கொண்டு உங்கள் கணவனை சர்வதேச அளவில் தேடப்படும் கொடிய குற்றவாளி என்று அறிவித்துவிடுவார்கள். பிறகு சர்வதேச அளவில் உங்களது கணவன் மிகப்பெரிய குற்றவாளியாகக் கருதப்படுவார். எப்போது எந்த விமான நிலையத்திற்கு சென்றாலும் உடனடியாக சட்டைக் காலரை பிடித்துக்கொள்வார்கள். அதைப் பற்றிய செய்தியைப் பாருங்கள்.


தினமலர் 19 ஜூலை 2010

புதுடில்லி : திருமணம் செய்து ஏமாற்றி விட்டு, மனைவியை அனாதையாக விட்டு விட்டு, வெளிநாடுகளுக்கு ஓடிய 600 கணவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில், "ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள்.


போதை மருத்து கடத்துவோர், பயங்கரவாதிகள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு எதிராகவே வழக்கமாக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்படும். ஒருவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டால், இதுகுறித்த தகவல் இன்டர்போல் போலீசாருக்கு தெரிவிக்கப்படும். குற்றவாளி பதுங்கியிருப்பதாக கருதப்படும் நாட்டில், அவரை தேடும் பணி முடுக்கி விடப்படும். மேலும், விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும். சம்பந்தபட்ட நபர், விமான நிலையத்தில் தனது பாஸ்போர்ட்டை சோதனைக்காக கொடுக்கும்போது, அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகி விடும். உடனடியாக, அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அந்த நபரை அவர்களிடம் ஒப்படைப்பர். பயங்கரவாதிகள், போதை மருந்து கடத்துவோர் மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு வந்து திருமணம் செய்து விட்டு, மனைவியை ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி பதுங்கி விடும் கணவர்களும் தற்போது இந்த பட்டியலில் சேர்ந்துள்ளனர். இதுபோல் 600 பேருக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது
: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் திருமணம் செய்வதற்காக இந்தியா வருகின்றனர். இவர்களில் சிலர், திருமணம் முடிந்தவுடன், மனைவியை ஏமாற்றி இங்கேயே விட்டு விட்டு, அவர்கள் மட்டும் வெளிநாடுகளில் பதுங்கி விடுகின்றனர். சரியாக விசாரிக்காமல், வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதற்காக அவசரப்பட்டு திருமணம் முடித்தவர்கள், இதுபோல் அதிகமாக ஏமாறுகின்றனர். குறிப்பிட்ட அந்த நபர், எந்த நாட்டில், என்ன வேலையில் இருக்கிறார் என்பது கூட இவர்களுக்கு தெரிவது இல்லை. ஒட்டுமொத்தமாக ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர், இதுபோல் திருமணம் செய்து விட்டு ஓடியவர்களாக உள்ளனர். இவ்வாறு ஏமாற்றி விட்டு ஓடுவோரில் பெரும்பாலானோர் படித்தவர்களாகவும், நல்ல வேலையில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என்பது தான், அதிர்ச்சியான தகவல். இவ்வாறு திருமணம் செய்து விட்டு, ஓடுவோர் மீதும் வரதட்சணை கொடுமைக்கு சமமான வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலுள்ள செய்தியில் கவனித்தீர்களா. ஏமாற்றி திருமணம் செய்தாலும் அதற்கும் வரதட்சணைக் கொடுமைக்குச் சமமான வழக்குப் பதிவு செய்யப்படும். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் செய்தியில் உள்ள பெரும்பாலான “ரெட்கார்னர் நோட்டீஸ்கள்” திருமணம் செய்து ஏமாற்றிய கணவர்களின் மீது பதிவு செய்யப்படவில்லை. அதற்கு மாறாக திருமணம் செய்து வெளிநாடுகளுக்குச் சென்று பிறகு கணவன் தனக்கு ஒத்துவரவில்லை என்றவுடன் இந்தியாவிற்கு வந்து நமது கலாச்சார நடைமுறைப்படி வரதட்சணைக் கொடுமை என்று IPC498A, Dowry Prohibition Act போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் இந்திய மருமகள்களின் வேண்டுகோளின்படிதான் இந்த சர்வதேச குற்றவாளி என்ற முத்திரை கணவன்கள் மீது குத்தப்படுகிறது.

அதனால் இந்த ரகசியத்தை மருமகள்கள் தெரிந்துகொண்டு உடனடியாக நடவடிக்கையில் இறங்கலாம். வெளிநாட்டில் இருக்கும் உங்கள் கணவனை உங்கள் வழிக்குக் கொண்டுவர இதை விட அருமையான வேறு வழி இருக்குமா? அது அவ்வளவு எளிதானதா என்று யோசிக்காதீர்கள். நம்ம ஊரில் ஜனாதிபதிக்கே கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றங்கள் இருக்கின்றன.

The Hindu Wednesday, Apr 28, 2004

NEW DELHI, APRIL 27. The Supreme Court today quashed the bailable arrest warrants issued by a Ahmedabad Magistrate against the President, A.P.J. Abdul Kalam, the Chief Justice of India, V.N. Khare, and two others on January 15 holding that the complaint was "ex-facie fraud".



அதனால் மருமகள் சொற்படி நடக்காத கணவனை சர்வதேசக் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை கிடையாது. இந்தியாவில் மருமகள்கள் முயற்சி செய்தால் எதுவும் செய்யலாம்.

உங்களுக்கு ஒரு போனஸ் செய்தி. மேலுள்ள வழிமுறையில் ஒரு மருமகள் மாமியாருக்கு விமான நிலையத்தில் எப்படி வரவேற்பு கொடுத்திருக்கிறார் என்று பாருங்கள்.



ஜெய்ப்பூர் : மருமகளிடம் வரதட்சணை கேட்ட வழக்கில், கலிபோர்னியாவிலிருந்து இந்தியா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண் நேற்று டில்லியில் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்காக இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய பெண் ஆர்த்தி. இவரது மகன் சாணக்கியாவுக்கும், நேகா பாலிவால் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது, நேகாவின் பெற்றோரிடம் ஆர்த்தி குடும்பத்தினர் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டனர். நேகாவின் பெற்றோரால் அவ்வளவு பணம் கொடுக்க முடியவில்லை. அதனால், கலிபோர்னியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சில நாட்களிலேயே நேகா சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். வரதட்சணை கொடுத்த பின்னரே நேகாவை ஏற்றுக் கொள்வோமென, ஆர்த்தி கூறிவிட்டார்.இதையடுத்து, தன் மாமியார் ஆர்த்தி மற்றும் கணவர் சாணக்கியா மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக நேகா புகார் அளித்தார். 2009 ஜனவரியில் இந்த புகாரை அளித்தார். இந்நிலையில், நேற்று கலிபோர்னியாவிலிருந்து டில்லி வந்திறங்கிய ஆர்த்தியை டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில், ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்து, விசாரணைக்காக ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்றனர். அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலுள்ள செய்தியில் பார்த்தீர்களா அமெரிக்காவில் நடந்த கொடுமைக்கு மருமகள் அமெரிக்க போலிஸிடம் எந்தப் புகாரும் தெரிவிக்காமல் இந்தியாவிற்கு வந்துதான் வரதட்சணைப் புகார் கொடுத்திருக்கிறார். இந்தியாவில் மருமகள்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. இந்த விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.


இப்போதாவது உங்களுக்கு சி.பி.ஐ. , சர்வதேச போலிஸ், இந்திய அரசாங்கம் போன்றவற்றை உங்களின் வசதிக்கேற்றவாறு எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று ஒரு நம்பிக்கை பிறந்திருக்கும். இதுபோல கணவனை சர்வதேசக் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கும் வசதி வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது. இந்தியாவில் மட்டும்தான் இந்த அரிய வாய்ப்பு மருமகள்களுக்காக உருவாக்கப்பட்டு அரசாங்கமும், அதிகாரிகளும் மருமகள்களுக்காக வியர்வை சிந்தி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உழைப்பை வீணாக்கிவிடாதீர்கள். அதனால் கணவன் மற்றும் மாமியார் குடும்பத்திற்கெதிராக வரதட்சணை சட்டங்களை பயன்படுத்தும்போது சி.பி.ஐ., InterPol போன்ற அமைப்புகள் இந்திய மருமகள்களுக்கு கொடுக்கும் சிறப்புச் சலுகைகளையும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!