மருமகளிடம் பணியாத கணவன்களுக்கு இனி இரண்டே வழிதான்

மருமகளிடம் பணிவாக நடக்கத் தெரியாத கணவன்கள் ஒன்று கூடி சமீப காலமாக போராட்டம் நடத்தி தாங்கள் மருமகள் பாதுகாப்பு சட்டங்களால் துன்புறுத்தப்படுவதாக கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாா்கள். அவா்களது வாயை அடைத்து தலையில் தட்டி மருமகளின் காலில் விழும்படியாக நமது அரசாங்கம் இப்போது மருமகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மருமகள்களுக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறது.

வரதட்சணை தடுப்புச்சட்டத்தில் இந்த மாற்றத்தின் மூலம் கணவன்களுக்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. மருமகளின் வரதட்சணை வழக்கில் சிக்கி பிறகு மருமகளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு சமாதானமாக செல்வது
======
1) சமாதானம்: கோர்ட்டில் விசாரணை துவங்கினாலும், கணவன் - மனைவி சமாதானமாக செல்ல ஏதுவாக திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
=======
அப்படியும் பணியாத கணவன்கள் பிறகு பல ஆண்டுகள் வழக்கில் சிக்கி நீதிமன்றத்தில் சின்னாபின்னமான பிறகு தண்டனை பெற்று பிறகு மருமகளின் கட்டளைக்கு ஏற்ப தண்டத் தொகை கட்டி மருமகளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு பிறகு கண்காணாமல் ஓடிப்போவது இரண்டாவது வழி. இந்த மாதிரி கணவன்கள் "அடியாத மாடு படியாது" என்ற ரகம்.
=======
2) அபராதம்: மேலும், சிறை தண்டனைக்கு பதில், குறிப்பிட்ட தொகையை அபராதமாக வழங்கினால், தண்டனையிலிருந்து தப்பலாம் என, திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
=======
புத்திசாலி கணவன்கள் இப்போதே மருமகளிடம் பணிவாக நடந்துகொள்வது எப்படி என்று மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் பாடம் படிக்க ஆரம்பித்துவிடுவாா்கள்.

====================================

புதுடில்லி: 'மாமியார், மாமனாரை சிறையில் தள்ள வேண்டும்' என, மோசடித்தனமாகக் கருதும் மருமகள்களால் தொடரப்படும் வரதட்சணை கொடுமை வழக்குகள் அதிகரிப்பதால், அந்த சட்டத்தை திருத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நம் நாட்டில், வரதட்சணை கேட்பதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம். 'வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகின்றனர்' என, மணமகன் வீட்டார் மீது மணமகள், போலீசில் புகார் கொடுத்தால் போதும்.

3 ஆண்டு சிறை:

சம்பந்தப்பட்ட மணமகன் வீட்டார் உடனடியாக கைது செய்யப்படுவர்; குற்றம் நிரூபிக்கப்படுமானால், மூன்றாண்டு கள் சிறை தண்டனை கிடைக்கும்; அவர்களால் ஜாமினில் வெளியே வர முடியாது. வரதட்சணை குற்றங்களை தடுக்க, இத்தகைய கடுமையான சட்டப் பிரிவுகளை, இந்திய தண்டனை சட்டம் அளிக்கிறது. இதை சில பெண்கள், தவறாக பயன்படுத்துவதால், வரதட்சணை கொடுமைக்கு எதிரான, இந்திய தண்டனை சட்டம், 498 - ஏ பிரிவை திருத்தம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதற்கு, மத்திய சட்ட அமைச்சகமும், நீதிபதி மாலிமத் கமிஷனும் பரிந்துரை செய்துள்ளன.அதன் படி, கோர்ட்டில் விசாரணை துவங்கினாலும், கணவன் - மனைவி சமாதானமாக செல்ல ஏதுவாக திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அபராதம்:

மேலும், சிறை தண்டனைக்கு பதில், குறிப்பிட்ட தொகையை அபராதமாக வழங்கினால், தண்டனையிலிருந்து தப்பலாம் என, திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆண்டுக்கு 10 ஆயிரம் போலி வழக்குகள் பதிவு:

கடந்த, 2011, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், முறையே, 99 ஆயிரம், 1.06 லட்சம் மற்றும் 1.18 லட்சம் வரதட்சணை கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பின், அவற்றில், தலா 10 ஆயிரம் வழக்குகள், வேண்டுமென்றே மருமகளால் போடப்பட்ட வழக்குகள் என்பது தெரிய வந்தது. தேசிய குற்றப் பதிவகம், இந்த தகவலை தெரிவித்துள்ளது.