"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


பெங்களூரில் நடந்த அட்டூழியம்

மருமகள்களே,

சமீப காலமாக இந்திய மருமகள்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு பாதுகாப்பு தரும் சாதகமான சட்டங்களுக்கு எதிராகவும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக இந்திய அரசாங்கம் இதுவரை இந்திய மருமகளின் ஆபத்துக்கால அன்புத் தோழியாக இருந்துவந்த IPC498a என்ற வரதட்சணை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முயற்சி செய்துவருகிறது. இது இந்திய மருமகள்களுக்கு மிகவும் ஒரு ஆபத்தான சூழ்நிலையாகும்.

இதுபோன்ற தருணத்தில் பெங்களூரில் வாழும் மாமியார்கள் மற்றும் கணவர்கள் சாலையில் ஊர்வலமாகச் சென்று மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு அட்டூழியங்கள் செய்திருக்கிறார்கள். அந்த வீடியோவை உங்களுக்காத் தந்திருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கவனமாகப் பாருங்கள்.

வீடியோ - 1



வீடியோ - 2



வீடியோ - 3



இந்த சாதகமற்ற சூழ்நிலையைக் கண்டு மருமகள்கள் கொஞ்சமும் கலங்கவேண்டாம். கணவன்களும், மாமியார்களும் போடும் கூப்பாடுகளைக் கண்ட இந்திய அரசாங்கம் அவர்களைத் திருப்திபடுத்துவதற்காக IPC498a சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதாக அறிவித்திருந்தாலும் அது என்றுமே மருமகள்களின் நட்பினை இழக்கத் தயாராக இல்லை.

அதனால் IPC498a சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதாக அறிவித்த அதே நேரத்தில் குடும்ப வன்முறை சட்டத்தை (Domestic Violence Act) நன்றாக முடுக்கிவிட ஆரம்பித்திருக்கிறது. இது IPC498A சட்டத்தைவிட மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகும். அதனால் மருமகள்கள் இதுபோன்ற சூழ்நிலையைக் கண்டு கலங்கிவிடாமல் தயங்காமல் குடும்ப வன்முறை சட்டத்தை பயன்படுத்த ஆரம்பித்து விடலாம். இந்த சட்டத்தில் உள்ள நுணுக்கங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

இந்த சட்டத்தை பயன்படுத்துவதில் ஏதாவது தயக்கம் இருந்தால் வரதட்சணை சட்டங்கள் மூலம் மனைவி கணவனை மிரட்டினால் தவறில்லை என்ற பதிவினைப் படியுங்கள். மனதில் தெளிவு பிறக்கும்.

வாழ்த்துக்கள்!